கொரோனா சமூக பரவலை தடுக்கும் பொருட்டு 3-4-2020 முதல் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக காய்கறிகளை மொத்தமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு நேரடியாக வீடுகளுக்கே சென்று லாப நோக்கமில்லாமல் விற்பனை செய்து கொண்டு வருகிறது.
பொருட்கள் வேனில் பொதுமக்களின் வீட்டிற்கே கொண்டுபோய் விற்கப்படுகிறது. அறிவிப்புகள் வேனில் மைக் மூலம் செய்யப்பட்டு மக்களை சமூக இடைவெளியை கடைப்பிடித்து குழுவிற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் கொட்டாம்பட்டி அழகர்மலையான் சிறுதானியங்கள் மற்றும் இதர பயிர்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திடமிருந்து மரச்செக்கு கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லண்ணை மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களின் வீட்டிற்கே கொண்டுபோய் விற்கப்படுகிறது.
முக கவசம் தட்டுப்பாடாக உள்ள நிலையில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக மேலவளவு கிராம IPM IAMP குழு மகளிர் உறுப்பினர்கள் தற்போது காட்டன் துணியால் முக கவசம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் வார சந்தை, வயல்வெளிகளில் வேலை செய்யும் விவசாயிகளிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்க குழுவின் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.
மதுரை வாழை விவசாயிகள்
தற்போதைய சூழ்நிலையில் மதுரை மாவட்ட வாழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் விற்பனைக்காக தொடர்பை ஏற்படுத்தும் பொருட்டு "மதுரை வாழை விவசாயிகள்" என ஒரு வாட்ஸாப்ப் குருப்ப்பை துவக்கி அதில் மாவட்ட வாழை விவசாயிகள், மாவட்ட வாழைக்காய் கமிஷன் மண்டி, மாவட்ட வாழை இலை கமிஷன் மண்டி, வாழைக்காய் நேரடி வியாபாரிகள் மாவட்ட தோட்டக்கலை அதிகாரிகள், வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள், தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள், வேளாண் சந்தை அதிகாரிகள் ஒரு மையத்தில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழுவால் இணைக்கப்பட்டு தற்போது தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு விவசாயிகள் இந்த குரூப்பில் தங்களுடைய வாழை தார்களின் நிலவரத்தை படங்களுடன் தெரிவிப்பதால் வியாபாரிகள் நேரடியாக தெரிந்து கொள்ள வசதியாக உள்ளது. மேலும் சில விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் நேரடியான தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விவசாயிகள் தங்களின் வாழை சாகுபடி குறித்த சந்தேகங்களையும் பதிவிட்டு அதிகாரிகளின் ஆலோசனைனை பெற்றுவருகின்றனர்.
மேலும் வாழைகாய் கமிஷன் மண்டிகளில் தற்போது வாழை தார்ரை வைத்து விலை நிர்ணயம் செய்வதற்கு பதிலாக எடை கணக்கில் விலை நிர்ணயம் செய்தால் விவசாயிகளுக்கு பயனளிக்குமா? போன்ற விவாதங்களும் நடைபெற்றன.
மேலும் இந்த தளத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள வாழை சந்தைகளின் தினசரி விலை நிலவரங்களை நாம் தெரிந்துகொள்ள முயற்சிப்புப்போம்.
மாவட்டத்தில் உள்ள அணைத்து பகுதி வாழை விவசாயிகள், வாழைகாய் மற்றும் இலை கமிஷன் மண்டி உரிமையாளர்கள், வாழை சார்ந்த தொழில் முனைவோர் இணைவதற்கு அனைவரும் உதவவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
****சமூக இடைவெளி மிகப்பெரிய கொரோனா தடுப்பு யுக்தியாகும்****
இவண்
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு



