இயற்கை முறையில் வாழை சாகுபடி - மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு - மாதிரி செயல் விளக்க திடல்
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக வாழை சாகுபடியில் இயற்கை முறையில் உற்பத்தி செலவை குறைக்கும் பொருட்டு வைக்கோல் மூடாக்கு , சொட்டு நீர் பாசனம் , இயற்கை உரம் மற்றும் உயிர் உரங்கள் பயன்படுத்தப்பட்டு தற்போது அறுவடை செய்யப்படுகிறது.
உயிர் மூடாக்கு
விதை கிழங்கு பதிக்கும்போது சணப்பு மற்றும் தக்கைப்பூண்டு விதைக்கப்பட்டது .
50வது நாள் சணப்பு மற்றும் தக்கைப்பூண்டு செடிகளை புடிங்கி வாழை கட்டையை சுற்றி போடப்பட்டு ஊட்டமேற்றிய தொழுஉரம், கடலை புண்ணாக்கு மற்றும் வேப்பம்புண்ணாக்கு கலவை இடப்பட்டு பாத்தி அமைக்கப்பட்டது.
வைக்கோல் மூடாக்கு
பாத்தி போடப்பட்டு வைக்கோல் கொண்டு மூடாக்கு போடப்பட்டது. வைக்கோல் மூடக்கால் களை கட்டுப்படுத்தப்பட்டது. களை கட்டுப்படுக்காக உயிர் மற்றும் வைக்கோல் மூடாக்கை தவிர எந்த செலவினங்களும் செய்யப்படவில்லை. . வைக்கோல் மூடக்கால் நிலத்தில் ஈரப்பதம் நிலைநிறுத்தப்பட்டது. வைக்கோல் சிறுக சிறுக மக்கி உரமானது அதற்குள் வாழை முழு வளர்ச்சியடைந்தது.
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டு நீர் பாசனம் செய்யப்பட்டது
ஒவ்வொரு மாதமும் சொட்டுநீர் பாசனம் மூலம் மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம் தயாரிப்பான ட்ரிகோடெர்மா விரிடி ஒரு கட்டைக்கு 10 கிராம் வீதம் வழங்கப்பட்டது. சொட்டுநீர் பயன்படுத்தப்பட்டதால் வேலையாட்கள் செலவு குறைக்கப்பட்டது. வாடல் நோய் மற்றும் இழை கருகல் கட்டுப்படுத்தப்பட்டது.
ரசாயனம் முற்றிலும் தவிர்க்கப்பட்டது. பூ ஓடித்தவுடன் பஞ்சகவியா மற்றும் கடலை புண்ணாக்கு கரைசல் கட்டப்பட்டது.
தொடர் மழையால் சற்று பின்னடைவு ஆனால் இயற்கை சாகுபடியால் பெரும் மகசூல் இழப்பு தவிர்க்கப்பட்டதாக உணர்கிறோம்.
நஞ்சில்லா அதிக ருசியான நாட்டு வாழைப்பழம். நாட்டு வாழைப்பழம் பெரும்பாலும் மருந்தாக பயன்படுத்துவர். கண்டிப்பாக மருந்தாகவும் சுவையான உணவாகவும் அமையும் என்ற மன மகிழ்ச்சி