இரசாயன உர மற்றும் பூச்சி கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு நஞ்சில்லா கிராமமே எங்கள் இலக்கு என்ற விழிப்புணர்வு முகாம் மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சி, மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு , மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம் மற்றும் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைகழக வேளாண் இளநிலை பட்டதாரி கல்லூரி மாணவிகள் ஆகியோர் இணைந்து மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் ஊராட்சி மன்ற செயலாளர் முன்னிலையில் பெரிய ஊரணியில் நடைபெற்றது. நிகழ்வில் 300 க்கும் மேற்பட்ட வேளாண் மகளிர்கள் கலந்துகொண்டனர்.
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு
Thursday, 12 October 2023
மேலவளவில் நஞ்சில்லா கிராமம் விழிப்புணர்வு முகாம் - the pesticide-free natural forming
Thursday, 1 September 2022
Friday, 12 August 2022
நிலக்கடலையில் வேரழுகல் நோய் மேலாண்மை#root-disease-management-in-groundnut#
வேரழுகல் நோயானது ‘மேக்ரோபோமினா பேசியோலினா’ என்ற பூஞ்சாணத்தால் இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் தோன்றுகிறது.
விதைத்த 30 முதல் 50 நாட்கள் வரை இந்த நோய் தாக்குதல் காணப்படும். நோய் கிருமிகள் மண்ணிலிருந்து செடிகளுக்கு பரவுகிறது.
நிலக்கடலையில் நோய் தாக்கிய செடிகளின் வேர்கள் மற்றும் தண்டின் அடிப்பகுதி அழுகிக் காணப்படும். நோய் தாக்கிய செடிகள் காய்ந்து இறந்து விடுகின்றன.
இதனால் ஆங்காங்கே செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும். நோய் தாக்குண்ட செடிகள் காய்ந்து விடுவதால் பல இடங்களில் நிலம் சொட்டை சொட்டையாய் காணப்படும். இலைகள் மஞ்சள் நிறமடைந்து பழுத்து உதிர்ந்து விடும். பாதிக்கப்பட்ட செடியும் சீக்கிரமாக காய்ந்து விடும். நோயினால் பாதிக்கப்பட்ட செடியை மெதுவாக இழுத்தாலும் எளிதாக கையோடு வந்து விடும்
கட்டுப்படுத்தும் முறைகள்:
தரமான விதைகளை ‘டிரைக்கோடெர்மா விரிடி’ 4 கிராம் / கிலோ அல்லது பேசில்லஸ் சப்டிலிஸ் 10 கிராம் / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி அவசியம் செய்ய வேண்டும்.
விதைத்த 20 – 30 நாட்களுக்குள் ‘பேசில்லஸ் சப்டிலிஸ்’ / ‘டிரைக்கோடேர்மா விரிடி’ 2.5 / கிலோ / எக்டேர் என்ற அளவில் அதனுடன் 50 கிலோ தொழு உரம் கலந்து இட வேண்டும்.
டிரைக்கோடெர்மா விரிடி, பேசில்லஸ் சப்டிலிஸ் தேவைக்கு
தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை - கொட்டாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் கீழ் மேலவளவில் "உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம்" 15 மகளிர் விவசாயிகளை கொண்டு துவங்கப்பட்டு தற்போது தரமான டிரைக்கோடெர்மா விரிடி , பேசில்லஸ் சப்டிலிஸ் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்து வருகிறது.
தேவைப்படும் விவசாயிகள் மேலவளவு உயிர் காரணி உற்பத்திமையத்தில் பெற்றுக்கொள்ளலாம். வெளி மாவட்டங்களுக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
டிரைக்கோடெர்மா விரிடி - Rs 100/கிலோ
பேசில்லஸ் சப்டிலிஸ் - Rs 100/கிலோ
தொடர்புக்கு 8838547932.
உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம்,
மேலவளவு,
கொட்டாம்பட்டி வட்டாரம்,
மேலூர் வட்டம்,
மதுரை மாவட்டம்.
Monday, 27 June 2022
நெல் சாகுபடி உயிரியல் முறை நோய்க்கட்டுப்பாடு #biofertilizers-bacillus-subtilis#
பேசில்லஸ் சப்டில்லிஸ் என்பது மண்ணில் வாழும் ஒரு பேக்டீரியம் ஆகும். இது பயிரில் தோன்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும், பயிர் வளர்ச்சியை தூண்டுவதிலும் முக்கிய பங்கு வகுக்கிறது. இப்பாக்டடீரியம் கடினமான புறத்தோலையுடைய என்டோஸ் போரை உற்பத்தி செய்வதால், வறண்ட சூழ்நிலையையும் தாங்கி வளரக்கூடியது. இப்பேசில்லஸ் சப் டில்லிஸ் நுண்ணுயிரானது சூடோமோனாஸ் ஃபுளூரோசன்ஸை விட பயிர்களுக்கு அதிக பாதுகாப்பளி ப்பதால் இதனை சூடோமோனாஸ்க்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
நெற்பயிர்களை பாதிக்கும் குலை நோய், இலைப் புள்ளி நோய், பாக்டீரியா இலைக்கருகல் நோய், இலையுறைக் கருகல் நோய், இலையுறை அழுகல் நோய், தண்டழுகல் நோய், தூர் அழுகல் நோய் மற்றும் நெற்பழ நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த பயன்படும் ரசாயனக் கொல்லிகள் பெரியளவில் தீங்கு ஏற்படுத்தக் கூடியவை. அவற்றைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சுழல் மாசுபாடு, நோய்க் காரணிகளுக்கு எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பு, உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மை, உயிரினங்களுக்கு தீங்கு போன்றவை ஏற்படுகின்றன.ஆனால், உயிர் எதிர்கொல்லியான பேசில்லஸ் சப்டில்லிஸ் பயன்படுத்துவதால் இத்தகைய தீங்குகள் ஏற்படுவதில்லை.
நெல்லில் பயன்படுத்தும் முறை
விதைநேர்த்தி
பேசில்லஸ் சப்டில்லிஸை தண்ணீரில் நன்கு கரைத்து விதை நெல்லை இக்கரைசலினுள் உறவைத்து விதையினை நாற்றங்காலில் விதைக்கவும்.
நெல் நாற்றின் வேர்களை நனைத்தல்
நாற்றுப்பறியின் போது ஒரு கிலோ பேசில்லஸ் சப்டில்லிஸை கரைத்து அக்கரைசலில் பறித்த நாற்றுகளின் வேர்கள் நன்கு நனையும்படி 20 நிமிடம் உறவைத்து பின்பு நடவு வயலில் நடவும்.
நேரடியாக வயலில் இடுதல்
வயலில் ஒரு கிலோ பேசில்லஸ் சப்டில்லிஸை 20 கிலோ நன்கு மக்கிய தொழு எருவுடன் கலந்து 1 ஏக்கர் பரப்பளவு வயலில் சீராக தூவ வேண்டும்.
தெளிப்பு முறை
ஒரு ஏக்கருக்கு 90 லிட்டர் நீரில் 500 கிராம் பேசில்லஸ் சப்டில்லிஸை கரைத்து நெற்பயிர் முழுவதும் நன்கு நனையும் படி குளிப்பாட்டவும்.
பேசில்லிஸ் சப்டில்லிஸ் சிறப்புகள்
1) இதனை சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ்க்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
2) இப்பேக்டீரியம் உயிர் எதிர்பொருளை சுரப்பதுடன், நைட்ரஜன் என்ற தாதுப்பொருளை நிலைநிறுத்துவதால், நெற்பயிரின் நோயைக் கட்டுப்படுத்துகிறது.
3) இப்பேக்டீரியம் தாவரத்தினுள் வாழும் தன்மையுடையதால் மண்ணில் வாழும் பூஞ்சாணக் காரணிகளை நன்றாக கட்டுப்படுதும்.
குறிப்பு:
1) இந்த பாக்டீரியா கலவையை தயாரித்த 4 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
2) இதனை அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டிரியா போன்ற அனைத்து உயிர் உரங்களுடன் கலந்து வயலில் இடலாம்.
3) இதனை பூஞ்சான மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் கலத்தல் கூடாது.
பேசில்லஸ் சப்டிலிஸ் - ரூபாய் 100/கிலோ
தொடர்புக்கு 8838547932.
உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம்
மேலவளவு IPM கிராம குழு ,
கொட்டாம்பட்டி வட்டாரம்,
மேலூர் வட்டம்.
மதுரை மாவட்டம்
Tuesday, 11 January 2022
இயற்கை முறையில் வாழை சாகுபடி - மாதிரி செயல் விளக்க திடல் #organic-banana-farming-cultivation-practices#
இயற்கை முறையில் வாழை சாகுபடி - மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு - மாதிரி செயல் விளக்க திடல்
Thursday, 30 September 2021
மண் வளம் காக்க TN-IAMP திட்டத்தின் மூலம் உதவி #TN-IAMP#
இதன் மூலம் மண் வளம் மேம்பட்டு நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடு அதிகரித்து மகசூல் அதிகரிக்கும்,களைக்கான செலவீனங்கள் குறையும் மற்றும் ரசாயன உரச்செலவு குறையும் என்பதை உணர்ந்து ஆர்வமாக விவசாயிகள் விதைத்து நெல் நடவு பணிகளுக்கு தயாராகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
அதிக ரசாயன உர பயன்பாட்டால் மண்வளம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மண்வளத்தை மீட்டெடுக்க TN-IAMP திட்டம் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கிறது . சென்ற வருடம் 250க்கும் மேற்பட்ட குருசிறு விவசாயிகள் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேளாண்மை துறை மற்றும் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பயிர் நோயியல் துறைகளுக்கு விவசாயிகளின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு
Wednesday, 18 August 2021
வாழை சாகுபடியில் அடியுரமாக டிரைக்கோடெர்மா விரிடி பயன்பாடு - #banana-with-trichoderma-viride#



































