Monday, 30 March 2020

மேலவளவு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் - மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நன்றி - Melavalavu-TNCSC-DPC-2020


30-03-2020, 
இரண்டாவது வருடமாக மேலவளவில் தமிழ்நாடு அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைய உதவியமைக்கு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு  மற்றும் சுற்று வட்டார கிராமத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் கொள்முதல் நிலையம் சிறந்த முறையில் நடத்திக்கொடுத்தமைக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் - மதுரை மாவட்டம், வேளாண் துறை - மதுரை மாவட்டம் அவர்களுக்கு மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு  மற்றும் சுற்று வட்டார கிராமத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.    


மேலவளவு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.  நெல் கொள்முதல் நேற்றுடன் முடிக்கப்பட்டு அனைத்து மூடைகளும் எடுத்துச்செல்லப்பட்டது.

நேற்று கடைசி மற்றும் 29வது லாரியில் குழு உறுப்பினர் ரம்யா  கண்ணன் மற்றும் அணியினர் மூடைகளை ஏற்றி இனிதே நிறைவு செய்தனர். நெல் தூத்துவத்தில்  குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் சிறப்பாக செயல்பட்டனர். நெல் தூற்றும் பணியில்  பெரும் பகுதி கிராம மகளிர்களே செய்தனர்.



மொத்தம் 14887 மூடைகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்க்காக ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 174 விவசாயிகள் பயனடைந்தனர். அவற்றுள்  162 குறு/சிறு விவசாயிகள் அடங்குவர்.   




வேலை வாய்ப்பு
இந்த இரண்டு மாதங்களில் நமது கிராமத்தில்  20லிருந்து 30 நபர்கள் வரை முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்களாக வேலை செய்துள்ளனர்.  இதன் மூலம் சம்பளமாக  ரூபாய் 3 லட்சம் வரை பெற்றுள்ளனர்.


மேலவளவு நிலையத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பில் கிளார்க் ஈஸ்வரன் அவர்களின்  சிறப்பான வழிநடத்தலுக்கு மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நல்ல மாற்றம்
இந்த வருடம் பெரும் பகுதி விவசாயிகள்  வெளி சந்தை மற்றும் இடை தரகர்களை தவிர்த்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பயனடைந்துள்ளனர்.

இதுவரை கிட்டத்தட்ட 25லிருந்து 30 லட்சம் வரை குறு சிறு விவசாயிகளின் பணத்தை வெளிச்சந்தை மற்றும் இடை தரகர்களிடம் செல்வதை தவிர்த்து விவசாயிகளிடமே சென்றடைய மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு வழிவகை செய்துள்ளது.

இது கூட்டு பண்ணையத்தின்  வெற்றியே!!!


அதிக குறு சிறு விவசாயிகளை கொண்டுள்ள மேலவளவு போன்ற கிராமங்களுக்கு கூட்டு பண்ணையம் அவசியம். இது போன்ற பிரச்சாரத்தை மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு அனைத்து கிராமங்களுக்கும் எடுத்துச்செல்லும்.

சென்ற வருடம் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் விவசாயிகளை அரசு  நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்துமாறு இரு சக்கர வாகனங்களில் பேரணியாக மேலவளவு சுற்று வட்டார கிராமங்களுக்கு  சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்

இவண்
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு
 

Thursday, 12 March 2020

கூட்டு பண்ணையத்தின் வெற்றியே!!! collective farming


தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், மேலவளவு

இதுவரை 12242 மூடைகள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளன.
9864 மூடைகள் TNCSC குடோனுக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன
மேலவளவு சென்டரில் இடவசதி இல்லாததால் பல விவசாயிகள் நொண்டிகோவில்பட்டி மற்றும்  தும்பைப்பட்டி அரசு நேரடி நெல் கொள்முதல்  நிலையங்களில் சென்று பயனடைந்துள்ளனர்.

இந்த வருடம் பெரும் பகுதி விவசாயிகள்  வெளி சந்தை மற்றும் இடை தரகர்களை தவிர்த்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பயனடைந்துள்ளனர்.

இதுவரை கிட்டத்தட்ட 25லிருந்து 30 லட்சம் வரை குறு சிறு விவசாயிகளின் பணத்தை வெளிச்சந்தை மற்றும் இடை தரகர்களிடம் செல்வதை தவிர்த்து விவசாயிகளிடமே சென்றடைய மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு வழிவகை செய்துள்ளது.

இது கூட்டு பண்ணையத்தின்  வெற்றியே!!!

அதிக குறு சிறு விவசாயிகளை கொண்டுள்ள மேலவளவு போன்ற கிராமங்களுக்கு கூட்டு பண்ணையம் அவசியம். இது போன்ற பிரச்சாரத்தை மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு அனைத்து கிராமங்களுக்கும் எடுத்துச்செல்லும்.

சென்ற வருடம் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் விவசாயிகளை அரசு  நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்துமாறு இரு சக்கர வாகனங்களில் பேரணியாக மேலவளவு சுற்று வட்டார கிராமங்களுக்கு  சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்

இவண்
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு
 

Tuesday, 10 March 2020

நெல் அறுவடை இயந்தரங்களுக்கு அதிக வாடகை - விவசாயிகள் வேதனை. melavalavu paddy harvesting machine price issue


3/102020,

மேலவளவில் தற்போது நெல் அறுவடை இயந்திர வாடகை மணிக்கு 2400 முதல் 2800 வரை வசூல் செய்கின்றனர். சென்ற வருடம் 1800 முதல் 2200 வரை இருந்தது.

தற்போது மேலவளவு பகுதிகளில் நெல் அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. தண்ணீர் குறைவின்றி இருந்த போதும் பருவநிலை காரணிகளால் நெல் பூக்கும் நேரத்தில் நெல்லில் எடை பழம் நோய் மற்றும் புகையான் காரணங்களால் நெல் மகசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.   இதனால் விவசாயிகள் சாகுபடிக்கான செலவு தொகையையே எடுப்பதற்கு போராடும் நிலையில் அறுவடை இயந்திர வாடகை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. 

விவசாயிகளின் நலன் கருதி சாகுபடி செலவை குறைக்கும் பொருட்டு
வேளாண் பொறியியல் துறை மூலம்  அரசு அறுவடை இயந்திரங்களை வரவழைத்து விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மாவட்டத்தில் தனியார் வாடகை இயந்திரங்களுக்கு முறையான விலை நிர்ணயம் செய்து அனைத்து விவசாயிகளும் பயனடையுமாறு வரும் காலங்களில் நடைமுறை படுத்துமாறு வேண்டுகிறோம். 

*** அடுத்த வாரம் குஞ்சுங்கறந்தான் குளத்தில் திருந்திய நெல் சாகுபடி  முறையில் பயிர் செய்துள்ள 15 ஏக்கர் அறுவடைக்கு வரவுள்ளது. அதற்க்கு  வேளாண் பொறியியல் துறை மூலம்  அரசு அறுவடை இயந்திரங்களை வரவழைத்து விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு அறுவடை செய்ய உதவிடுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

*** மேலும் ஒரு மாதங்களுக்கு மேலாகியும் மேலவளவு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடை வைத்துள்ள விவசாயிகளுக்கு இன்னும் நெல்லுக்கான தொகை கிடைக்கவில்லை. மகசூல் இழப்பு, அதிக நெல் அறுவடை இயந்திர வாடகை ,நெல் எடை வைப்பதற்கு அதிக நாட்கள் காத்திருப்பு போன்ற காரணங்களுடன் போராடும் விவசாயிகளுக்கு நெல்லுக்கான பணத்திற்கு ஒரு மாதமாக காத்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.  




Monday, 9 March 2020

மேலவளவில் சர்வதேச மகளிர் தின விழா melavalavu-international-women's-day


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மேலவளவில் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில்  சர்வதேச மகளிர் தின விழா  நடைபெற்றது. விழா மதுரை வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் முன்னிலையில் முனைவர் செல்விராணி, முனைவர் உஷாராணி, முனைவர் ஆனந்தி, முனைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.  மேலவளவு பஞ்சாயத்து தலைவர்   தங்கம் மலைச்சாமி  அவர்கள் தனிமையில் நடைபெற்றது.



நிகழ்ச்சியில் மேலவளவு கிராம IPM IAMP குழு  மகளிர் உறுப்பினர்கள், மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் கிராம மகளிர்கள் கலந்துகொண்டனர்.

`வீட்டுக்கு ஒரு தேனீ பெட்டி.. குடும்பத்துக்கு ஆயுள் கெட்டி' என்று தேனீ வளர்ப்புப் பற்றி பலருக்கும் பாடம் எடுத்து பல தொழில் முனைவோர்களை உருவாக்கி வரும் பெண் தொழிலதிபர்  மதுரை ஜோஸ்பின் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார்.



நிகழ்ச்சியில் மகளிர் பாதுகாப்பு,   மகளிர் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள், வீட்டு மருத்துவத்தில் அஞ்சலைப்பெட்டி , விவசாயம் மற்றும் மருத்துவத்தில்  தேன் மற்றும் தேனீயின் பங்கு  மற்றும் பல மகளிர் சார்ந்த விவாதங்கள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மகளிருக்கும் குடும்ம்ப ஆரோக்கியத்திர்காக பப்பாளி நாற்று வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியின் நிறைவாக  மேலவளவு கிராம IPM IAMP மகளிர் குழு தலைவர் பவானி அவர்கள் நன்றியுரையாற்றினார்