சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மேலவளவில் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது. விழா மதுரை வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் முன்னிலையில் முனைவர் செல்விராணி, முனைவர் உஷாராணி, முனைவர் ஆனந்தி, முனைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலவளவு பஞ்சாயத்து தலைவர் தங்கம் மலைச்சாமி அவர்கள் தனிமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மேலவளவு கிராம IPM IAMP குழு மகளிர் உறுப்பினர்கள், மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் கிராம மகளிர்கள் கலந்துகொண்டனர்.
`வீட்டுக்கு ஒரு தேனீ பெட்டி.. குடும்பத்துக்கு ஆயுள் கெட்டி' என்று தேனீ வளர்ப்புப் பற்றி பலருக்கும் பாடம் எடுத்து பல தொழில் முனைவோர்களை உருவாக்கி வரும் பெண் தொழிலதிபர் மதுரை ஜோஸ்பின் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார்.
நிகழ்ச்சியில் மகளிர் பாதுகாப்பு, மகளிர் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள், வீட்டு மருத்துவத்தில் அஞ்சலைப்பெட்டி , விவசாயம் மற்றும் மருத்துவத்தில் தேன் மற்றும் தேனீயின் பங்கு மற்றும் பல மகளிர் சார்ந்த விவாதங்கள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மகளிருக்கும் குடும்ம்ப ஆரோக்கியத்திர்காக பப்பாளி நாற்று வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவாக மேலவளவு கிராம IPM IAMP மகளிர் குழு தலைவர் பவானி அவர்கள் நன்றியுரையாற்றினார்









No comments:
Post a Comment