Monday, 30 March 2020

மேலவளவு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் - மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நன்றி - Melavalavu-TNCSC-DPC-2020


30-03-2020, 
இரண்டாவது வருடமாக மேலவளவில் தமிழ்நாடு அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைய உதவியமைக்கு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு  மற்றும் சுற்று வட்டார கிராமத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் கொள்முதல் நிலையம் சிறந்த முறையில் நடத்திக்கொடுத்தமைக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் - மதுரை மாவட்டம், வேளாண் துறை - மதுரை மாவட்டம் அவர்களுக்கு மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு  மற்றும் சுற்று வட்டார கிராமத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.    


மேலவளவு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.  நெல் கொள்முதல் நேற்றுடன் முடிக்கப்பட்டு அனைத்து மூடைகளும் எடுத்துச்செல்லப்பட்டது.

நேற்று கடைசி மற்றும் 29வது லாரியில் குழு உறுப்பினர் ரம்யா  கண்ணன் மற்றும் அணியினர் மூடைகளை ஏற்றி இனிதே நிறைவு செய்தனர். நெல் தூத்துவத்தில்  குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் சிறப்பாக செயல்பட்டனர். நெல் தூற்றும் பணியில்  பெரும் பகுதி கிராம மகளிர்களே செய்தனர்.



மொத்தம் 14887 மூடைகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்க்காக ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 174 விவசாயிகள் பயனடைந்தனர். அவற்றுள்  162 குறு/சிறு விவசாயிகள் அடங்குவர்.   




வேலை வாய்ப்பு
இந்த இரண்டு மாதங்களில் நமது கிராமத்தில்  20லிருந்து 30 நபர்கள் வரை முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்களாக வேலை செய்துள்ளனர்.  இதன் மூலம் சம்பளமாக  ரூபாய் 3 லட்சம் வரை பெற்றுள்ளனர்.


மேலவளவு நிலையத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பில் கிளார்க் ஈஸ்வரன் அவர்களின்  சிறப்பான வழிநடத்தலுக்கு மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நல்ல மாற்றம்
இந்த வருடம் பெரும் பகுதி விவசாயிகள்  வெளி சந்தை மற்றும் இடை தரகர்களை தவிர்த்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பயனடைந்துள்ளனர்.

இதுவரை கிட்டத்தட்ட 25லிருந்து 30 லட்சம் வரை குறு சிறு விவசாயிகளின் பணத்தை வெளிச்சந்தை மற்றும் இடை தரகர்களிடம் செல்வதை தவிர்த்து விவசாயிகளிடமே சென்றடைய மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு வழிவகை செய்துள்ளது.

இது கூட்டு பண்ணையத்தின்  வெற்றியே!!!


அதிக குறு சிறு விவசாயிகளை கொண்டுள்ள மேலவளவு போன்ற கிராமங்களுக்கு கூட்டு பண்ணையம் அவசியம். இது போன்ற பிரச்சாரத்தை மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு அனைத்து கிராமங்களுக்கும் எடுத்துச்செல்லும்.

சென்ற வருடம் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் விவசாயிகளை அரசு  நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்துமாறு இரு சக்கர வாகனங்களில் பேரணியாக மேலவளவு சுற்று வட்டார கிராமங்களுக்கு  சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்

இவண்
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு
 

1 comment: