Tuesday, 10 March 2020

நெல் அறுவடை இயந்தரங்களுக்கு அதிக வாடகை - விவசாயிகள் வேதனை. melavalavu paddy harvesting machine price issue


3/102020,

மேலவளவில் தற்போது நெல் அறுவடை இயந்திர வாடகை மணிக்கு 2400 முதல் 2800 வரை வசூல் செய்கின்றனர். சென்ற வருடம் 1800 முதல் 2200 வரை இருந்தது.

தற்போது மேலவளவு பகுதிகளில் நெல் அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. தண்ணீர் குறைவின்றி இருந்த போதும் பருவநிலை காரணிகளால் நெல் பூக்கும் நேரத்தில் நெல்லில் எடை பழம் நோய் மற்றும் புகையான் காரணங்களால் நெல் மகசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.   இதனால் விவசாயிகள் சாகுபடிக்கான செலவு தொகையையே எடுப்பதற்கு போராடும் நிலையில் அறுவடை இயந்திர வாடகை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. 

விவசாயிகளின் நலன் கருதி சாகுபடி செலவை குறைக்கும் பொருட்டு
வேளாண் பொறியியல் துறை மூலம்  அரசு அறுவடை இயந்திரங்களை வரவழைத்து விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மாவட்டத்தில் தனியார் வாடகை இயந்திரங்களுக்கு முறையான விலை நிர்ணயம் செய்து அனைத்து விவசாயிகளும் பயனடையுமாறு வரும் காலங்களில் நடைமுறை படுத்துமாறு வேண்டுகிறோம். 

*** அடுத்த வாரம் குஞ்சுங்கறந்தான் குளத்தில் திருந்திய நெல் சாகுபடி  முறையில் பயிர் செய்துள்ள 15 ஏக்கர் அறுவடைக்கு வரவுள்ளது. அதற்க்கு  வேளாண் பொறியியல் துறை மூலம்  அரசு அறுவடை இயந்திரங்களை வரவழைத்து விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு அறுவடை செய்ய உதவிடுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

*** மேலும் ஒரு மாதங்களுக்கு மேலாகியும் மேலவளவு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடை வைத்துள்ள விவசாயிகளுக்கு இன்னும் நெல்லுக்கான தொகை கிடைக்கவில்லை. மகசூல் இழப்பு, அதிக நெல் அறுவடை இயந்திர வாடகை ,நெல் எடை வைப்பதற்கு அதிக நாட்கள் காத்திருப்பு போன்ற காரணங்களுடன் போராடும் விவசாயிகளுக்கு நெல்லுக்கான பணத்திற்கு ஒரு மாதமாக காத்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.  




No comments:

Post a Comment