தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் மூலம் கடந்த வெள்ளிக்கிழமையன்று மேலவளவில் இயற்க்கை முறையில் பூச்சி மேலாண்மை குறித்த செயல்விளக்கம் சோலார் விளக்குப் பொறி கொண்டு உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளிடையே நடைபெற்றது.
.சோலார் சோலார் விளக்குப் பொறியில், வேப்ப எண்ணெய் மற்றும் சோப்பு கரைசலை ஊற்றி வைத்து விட்டால், இரவில் நீலநிற வண்ணத்தில் எரியும் விளக்கு வெளிச்சம், பூச்சிகளை கவர்ந்து இழுக்கும். பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பூச்சிகள், விளக்கு வெளிச்சத்தை நோக்கி வந்து கரைசலில் விழுந்து அழியும்.
ரசாயன மருந்தினை தவிர்த்து, சோலார் விளக்குப் பொறியை பயன்படுத்தும்போது நன்மை செய்யும் பூச்சிகள் பாதுகாக்கப்படுகின்றன.



No comments:
Post a Comment