இன் நிகழ்ச்சியில் முனைவர் R.விஜயலட்சுமி (உழவியல் துறை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்) ,முனைவர் கு.செல்வராணி ( உதவி பேராசிரியர் , வேளாண் விரிவாக்கம்) , முனைவர் சி.மேனகா (உதவி பேராசிரியர்,விதை நுட்பவியல்) ஆகியோர் கலந்துகொண்டனர்
முனைவர் கு.செல்வராணி அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி கூறியதாவது, நேரடி நெல்விதைப்பு கருவியின் மூலம் நெல்விதைப்பின் முக்கியத்துவம், விதை தேவை மற்றும் பராமரிப்பு, நிலம் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு, விதைப்பு மற்றும் சாகுபடி குறித்த தகவல்களை விவசாயிகளுக்கு விளக்கினார்.
முனைவர்.விஜயலட்சுமி அவர்கள் கூறியதாவது, விதை கருவியை பயன்படுத்தி நெல் விதைப்பு செய்வதன் காரணமாக ஒரு பயிருக்கும் இன்னொரு பயிருக்கும் இடைப்பட்ட இடைவெளி ஒரே அளவில் இருக்கும் மேலும் சரியான நெல் பயிர்களில் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.
நடவு செய்யும் பயிரை விட நேரடி நெல் விதைப்பில் விதைப்பின் மூலம் நெற்பயிர் 10 முதல் 15 நாட்களுக்கு முன்பாகவே அறுவடைக்கு தயாராகி விடுகிறது.
நேரடி நெல் விதைப்பு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்யும்பொழுது காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருக்க வேண்டும் இதன் காரணமாக நீர் சேமிக்க முடிகிறது.
நேரடி நெல் விதைப்புக் கருவி பயன்படுத்துவதன் காரணமாக நாற்று பறிப்பது, நாற்றங்கால் நடவு செய்வது இதற்காக ஆகும் ஆட்கூலி போன்றவை இல்லாமல் மிகவும் குறைகிறது.
நேரடி நெல் விதைப்புக் கருவியின் மூலம் விதைப்பதால் 25 முதல் 40% வரை விதையின் தேவையான அளவு குறைகிறது.
மேலும் நேரடி நெல்விதைப்பு, திருந்திய நெல் சாகுபடி மற்றும் நடைமுறையில் உள்ள சாதாரண நெல் நடவு குறித்த வேறுபாடுகளையும் விவசாயிகளுக்கு விளக்கினார்.
முனைவர் சி.மேனகா அவர்கள் கூறியதாவது, விதை தேர்வு மற்றும் விதை நேர்த்தி குறித்த அவசியத்தை எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து விவசாயிகளும் முக கவசத்துடம் சமூக இடைவெளியில் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment