மேலவளவு, 11/09/2019
தேசிய அளவிலான கால்நடை நோய் தடுப்பு, செயற்கை கருவூட்டல் முகாம் மற்றும் தூய்மையே சேவை இயக்கம் துவக்க விழா
நேற்று (11/09/2019) தடுப்பூசி, நோய் மேலாண்மை, செயற்கை கருவூட்டல் மற்றும் உற்பத்தித்திறன் குறித்து இந்தியாவின் 687 மாவட்டங்களிலும் வேளாண் அறிவியல் நிலையங்களில் பிரதமர் நரேந்திர மோடி ஒரே நேரத்தில் நாடு தழுவிய விழிப்புணர்வு முகாம்களை தொடங்கினார்.
மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி வட்டாரம் மேலவளவு கிராமம் வீரகாளி அம்மன் கோவில் திடலில் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் தேசிய அளவிலான கோமாரி நோய், கருச்சிதைவு நோய் தடுப்பு செயற்கை கருவூட்டல் முகாம் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
மாண்புமிகு மேலூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு பெ.பெரியபுள்ளான் என்ற செல்வம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. தமிழரசன் அவர்கள் முன்னிலையில் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் தொழில்நுட்ப வல்லுநர்கள் முனைவர் கு.செல்வராணி, முனைவர் இரா.அருண் குமார், முனைவர் சீ.கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கொட்டாம்பட்டி வேளாண்மை துறை சார்பாக வேளாண்மை உதவி இயக்குனர் மதுரை சாமி, உதவி வேளாண்மை அலுவலர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கால்நடை துறை சார்பாக மருத்துவர்கள் R.விவேக்குமார், B.ரமேஷ் , L.சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் மற்றும் மேலவளவு பகுதி விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் மேலாண்மை பற்றி விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்
முகாமில் 430 செம்மறி ஆடு, வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்கம் மருந்தும் 430 செம்மறி ஆடு, வெள்ளாடுகளுக்கு தடுப்பூசியும், 47 கால்நடைகளுக்கு சிகிச்சையும் 5 மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் மொத்தம் 1002 கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

மிகச் சிறப்பு...
ReplyDelete