தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், மேலவளவு
இதுவரை 12242 மூடைகள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளன.
9864 மூடைகள் TNCSC குடோனுக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன
மேலவளவு சென்டரில் இடவசதி இல்லாததால் பல விவசாயிகள் நொண்டிகோவில்பட்டி மற்றும் தும்பைப்பட்டி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சென்று பயனடைந்துள்ளனர்.
இந்த வருடம் பெரும் பகுதி விவசாயிகள் வெளி சந்தை மற்றும் இடை தரகர்களை தவிர்த்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பயனடைந்துள்ளனர்.
இதுவரை கிட்டத்தட்ட 25லிருந்து 30 லட்சம் வரை குறு சிறு விவசாயிகளின் பணத்தை வெளிச்சந்தை மற்றும் இடை தரகர்களிடம் செல்வதை தவிர்த்து விவசாயிகளிடமே சென்றடைய மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு வழிவகை செய்துள்ளது.
இது கூட்டு பண்ணையத்தின் வெற்றியே!!!
அதிக குறு சிறு விவசாயிகளை கொண்டுள்ள மேலவளவு போன்ற கிராமங்களுக்கு கூட்டு பண்ணையம் அவசியம். இது போன்ற பிரச்சாரத்தை மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு அனைத்து கிராமங்களுக்கும் எடுத்துச்செல்லும்.
சென்ற வருடம் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் விவசாயிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்துமாறு இரு சக்கர வாகனங்களில் பேரணியாக மேலவளவு சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்
இவண்
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு

Super brother
ReplyDeleteSuper brother
ReplyDeleteGreat broo
ReplyDeleteNice bro
ReplyDelete