Wednesday, 26 February 2020
Thursday, 13 February 2020
உயிர் உரம் தயாரிப்பு பயிற்சி - மேலவளவு TN IAMP-IPM கிராம குழு
13/2/2020, நிலவள, நீர்வள திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு திட்டத்திற்கு மாதிரி கிராமமாக நமது கிராமம் தேர்வு செய்யப்பட்டு 15 பேர் கொண்ட விவசாயிகள் மேலவளவு TN IAMP-IPM கிராம ஆர்வலர் குழுவாக அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவுக்கு வேளாண் துறை சார்பில் ட்ரைகோ ெடர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் உயிரியல் காரணிகள் உற்பத்தி செய்ய பயிற்சி விநாயகபுரம் மாநில ஒருங்கிணைந்த உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் நோக்கம் நமது கிராமத்தில் தரமான உயிர் உரம் உற்பத்தி செய்வது. தற்போது நமது பகுதிகளில் வாழை,நெல்,காய்கறி போன்ற தோட்டங்களில் அதிகமாக வாடல் நோய் தாக்குவதால் விவசாயிகள் உரக்கடைகளிருந்து சூடோமோனாஸ் மற்றும் ட்ரிகோவேரிடி வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆதலால் நமது கிராமத்திலே தரமான உயிர் உரங்கள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கிடைக்கச்செய்வது குழுவின் நோக்கமாகும்
உற்பத்தி செய்யப்படும் ட்ரைகோ ெடர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் போன்ற உயிர் காரணிகள் நமது தேவைக்குபோக பிற விவசாயிகளுக்கும் விற்று கூடுதல் வருமானம் ஈட்டலாம்.
Saturday, 8 February 2020
Friday, 7 February 2020
மேலவளவில் கூட்டு பண்ணையம் திருந்திய நெல் சாகுபடி #Melavalavu_collective_farming_SRI_paddy_cultivation
தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை, கொட்டாம்பட்டி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் கீழ் கூட்டு பண்ணைய திட்டத்தின் மூலம் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு செயல்பட்டு வருகிறது.
200 ஏக்கரில் திருந்திய நெல் சாகுபடிக்காக கொட்டாம்பட்டி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில்
- கூட்டாக விதை வாங்கி
- கூட்டாக பாய் நாற்றங்கால் அமைத்து
- கூட்டாக நடவு இயந்திரம் மூலம் நடவு செய்து
- கூட்டாக கோனோ வீடேர் வாங்கி களை எடுத்து
- கூட்டாக அறுவடை செய்து
- கூட்டாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டது
விவசாயிகளுக்கு தேவையான விதைகளை வேளாண்மை துறையில் மூலம் மானிய விலையில் பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
தற்போது ஆட்கள் பற்றாக்குறையால் சாதாரண நடவில் அதிக விதை, அதிக நாற்றங்கால் அளவு, பராமரிப்பு செலவு, நாற்று எடுத்தல், நடவு செலவு என உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது.
வரிசை நடவு இயந்திரம் மூலம் திருந்திய நெல் சாகுபடியில் ஆட்களின் தேவை மற்றும் உற்பத்தி செலவு வெகுவாக குறைகிறது.
மேலும் கூட்டு பண்ணைய திட்டத்தின் மூலம் கூட்டாக விதை, நாற்றங்கால், இடுபொருட்கள் வாங்குவதால் உற்பத்தி செலவு வெகுவாக குறைகிறது.
மேலும் திருந்திய நெல் சாகுபடி மூலம் களையைக் கட்டுப்படுத்த களைக் கருவி உபயோகிப்பதால் ஆட்செலவு குறைவு,பாசன நீர்த் தேவை 40 - 50 சதவீதம் குறைவு, அதிக வேர் வளர்ச்சி, அதிக கதிர்கள், அதிக மணிகள், அதிக தானிய மற்றும் வைக்கோல் மகசூல், எளிதான பூச்சி மேலாண்மை என பல நன்மைகள் உள்ளன.
திருந்திய நெல் சாகுபடி சம்பந்தமாக விவசாயிகளுக்கு பல கட்டங்களாக வேளாண் துறை மற்றும் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பாக விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழுவின் நோக்கம் விவசாயிகளிடையே தற்போதைய நடைமுறையில் உள்ள அடர் நடவு முறைக்கும் திருந்திய நெல் சாகுபடி முறைக்கும் உள்ள வேறுபாடுகளை சுய பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு வரும் காலங்களில் எது அவர்களுக்கு சரியானது என்பதை அவர்களே முடிவு செய்து வரும் காலங்களில் விவசாயிகள் பயில் செய்து அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்பதே குழுவின் நோக்கமாகும்
பாய் நாற்றங்கால் பணிதிருந்திய நெல் சாகுபடிக்கான பாய் நாற்றங்கால் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளிடையே கொட்டாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் திரு மதுரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வேளாண் அலுவலர் திரு பாலசுப்ரமணியன், வயலக வானொலி கொட்டாம்பட்டி அமுதா ராணி, கவிதா, பிரிய தர்ஷினி உடனிருந்தார்.
விதை நேர்த்தி, நாற்றங்கால் பராமரிப்பு சம்பந்தமாக விவசாயிகளுக்கு வயல் வெளி பயிற்சி வேளாண் துறை மற்றும் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பாக நடத்தப்பட்டது


வேளாண்மைத் துறை செயல் விளக்க திடலின் வெற்றி
திருந்திய நெல் சாகுபடி நடவு
ஒருங்கிணைந்த களை நிர்வாகம்
நெற்பயிரில் களைகள் அதிக அளவு விளைச்சல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
களைகளினால் நெல் பயிரில் 70 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. களைகள் பயிர்களோடு போட்டியிட்டு, பயிருக்குண்டான சத்துகள், நீர், சூரிய ஒளி, நிலம் போன்றவற்றை அதிக வீரியத்துடன் பகிர்ந்து பயிர் மகசூலைக் குறைக்கின்றன. களைகளினால் நடவு நெல், நேரடி நெல் விதைப்பு, மானாவாரி நெல் சாகுபடி முறைகளில் முறையே 34 முதல் 67 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
தட்பவெப்ப நிலை, மண்ணின் வகை, நெல் பயிரிடும் முறை, வகைகளின் குணம், ரகம், நீர் மேம்பாடு முறைகள் போன்ற காரணிகளினால் நெற்பயிரில் களைகளின் பாதிப்பு வேறுபடும். பொதுவாக, தமிழகத்தில் நெல் சாகுபடி செய்யும்போது நெல் வயலில் புல் வகை களைகளான வர்சனாம் புல், குதிரை வாலி, இஞ்சி புல், கோரை வகை களைகளான வட்டக்கோரை, ஊசிக்கோரை, அகன்ற இலை களைகளான நீர்மேல் நெருப்பு, நீர்முள்ளி, வல்லாரை, நீர்ப்புள்ளி, நீர் கிராம்பு, அரைகீரை, நீர்த்தாமரை, பொடுதழை, கொடகுசால், கொட்டகரந்தி ஆகியவை நெல் பயிரில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
சாகுபடி செய்யும் பயிர்களைக் காட்டிலும் விரைவாக வளர்வதற்கும், பரவுவதற்கும் களைகள் சிறப்புத் தன்மைகள் பெற்றுள்ளன. களைகளை அழிப்பது, ஒழிப்பது என்பது முடியாத செயலாகும். நல்ல மகசூல் பெற நடவு நெல் வயலில் நடவுசெய்த 30-ஆம் நாள் வரையிலும் களைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம்.
களை நிர்வாகம் சம்பந்தமாக விவசாயிகளுக்கு வயல் வெளியில் செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியளிக்கப்பட்டது.
மேலும் விவசாயிகளின் களை சார்ந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ள விவசாயிகளுக்கு சூழ்நிலைகளை உருவாக்கி கொடுக்கப்பட்டது
கோனோ வீடர்
OCT 2019 - மேலவளவில் கூடுதல் இயக்குனர் ஆய்வு
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வட்டாரத்தில் கூட்டு பண்ணைய திட்டம் மூலம் சிறப்பாக செயல்பட்டுவரும் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழுவை ஆய்வு செய்வதற்கு கூடுதல் இயக்குனர் வேளாண்மை துறை திருமதி விஜயராணி IAS அவர்கள் வருகை செய்து குழுவின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது அவருடன் வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன், வேளாண்மை துணை இயக்குனர் காமராஜ், வேளாண்மை துணை இயக்குனர் விவேகானந்தன், வேளாண்மை துணை இயக்குனர் தனலட்சுமி, கொட்டாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் மதுரை சாமி, மதுரை வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் திருமதி செல்வி ரமேஷ், உதவி பேராசிரியர் முனைவர் சீ.கிருஷ்ணகுமார், உதவி பேராசிரியர் முனைவர் உஷா ராணி , வேளாண்மை அலுவலர் விமலா, உதவி வேளாண்மை அலுவலர் பாலசுப்ரமணியன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை , உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரியங்கா மற்றும் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். இவ் விழாவில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டு பண்ணையத்திட்டத்தின் நோக்கத்தையும் அரசின் திட்டங்களையும் விவசாயிகள் பயனடையுமாறு சிறந்தமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலவளவில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளை பயனடையச்செய்தது, நவீன தோட்டக்கலை நாற்றங்கால் பண்ணை அமைத்து குறைந்த விலையில் விவசாயிகளுக்கு நாற்றுக்களை வழங்குவது, மதுரை வேளாண் அறிவியல் நிலையம் மூலம் உளுந்து விதை பண்ணை 25 ஏக்கரில் அமைத்தது, மஹிந்த்ரா EPC நிறுவனத்துடன் விநியோகிஸ்தர் ஒப்பந்தம் செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் சொட்டு நீர் பாசனம் செய்து கொடுப்பது மற்றும் கூட்டாக இயந்திரம், விதை வாங்கி திருந்திய நெல் சாகுபடிக்காக நாற்றங்கால் தற்போது அமைக்கப்பட்டு வருவது ஆகிய நிகழ்வுகளை கூடுதல் இயக்குனர் அவர்கள் கேட்டறிந்தார்.
கூடுதல் இயக்குனர் அவர்கள் உரையின் பொது விவசாயிகளிடம் கூறியதாவது, மின்சார பற்றாக்குறையில் இருந்து விடுபட சூரிய மின் சக்தி மோட்டார்களை பயன்படுத்துமாறும் சிறந்த நீர் மேலாண்மைக்காக நுண்ணீர் நீர் பாசனத்தை பயன்படுத்தவும், கரும்பு சாகுபடிக்கு சொட்டு நுண்ணீர் பாசனத்தை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
மாவட்டத்தில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் குழு
அட்மா திட்டத்தின் மூலம் மாவட்ட அளவில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு சிறப்பான செயல்பாட்டிற்கு ரூபாய் 20,000/- சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. அவற்றிற்க்கான காசோலையை கூடுதல் இயக்குனர் அவர்களிடமிருந்து குழுவின் செயலாளர் சிதம்பரம் மற்றும் பொருளாளர் சௌந்தரராஜன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்
மேலும் இவ்விழாவில் விவசாயிகளுக்கு நெல்லிற்க்கான இடுபொருட்கள் , தென்னை மரம் ஏறும் கருவி, சோலார் விளக்கு பொறி, இன கவர்ச்சி பொறி மற்றும் மஞ்சள் வண்ண நிற ஓட்டும் அட்டை ஆகியவை வழங்கப்பட்டன .
அட்மா திட்டத்தில் சிறந்த இயற்க்கை விவசாயிக்கான பரிசு
கடந்த வருட நெல் சாகுபடியில் ரசாயன பூச்சி கொல்லி மருந்துகளை தவிர்த்து முற்றிலும் இயற்க்கை முறையில் பூச்சி விரட்டி மற்றும் பஞ்சகாவியம் தயாரித்து தனக்கும் மற்றும் சில விவசாயிகளுக்கும் வழங்கி முன்னோடியாக இருந்த மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு பொருளாளர் திரு சௌந்தராஜன் அவர்களுக்கு அட்மா திட்டத்தில் சிறந்த விவசாயிக்கான பரிசினை மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர் மற்றும் உயர் திரு மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடமிருந்து பரிசுக்கான காசோலையை பெற்றுக்கொண்டார் .
EPC மஹிந்திரா நிறுவனத்துடன் சொட்டுநீர் பாசன கருவி விநியோகஸ்தர் ஒப்பந்தம்
24/09/2019 கொட்டாம்பட்டி K உழவர் உற்பத்தியாளர் குழு , EPC மஹிந்திரா நிறுவனத்துடன் சொட்டுநீர் பாசன கருவி விநியோகஸ்தர் ஒப்பந்தத்தில் கொட்டாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் திரு மதுரை சாமி அவர்கள் முன்னிலையில் மேலவளவு வீரகாளியம்மன் கோவில் திடலில் கையெழுத்திட்டனர். உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக அதன் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரும் EPC மஹிந்திரா நிறுவனம் சார்பாக senior teritory manager G.பூவலிங்கம், பிரேம்குமார் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வில் உதவி வேளாண்மை அலுவலர் பாலசுப்ரமணியன் மற்றும் பெரும்பாலான உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அக்டோபர் 2-2019, கிராமசபை கூட்டம் மேலவளவு
அக்டோபர் 2-2019 மேலவளவில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை கொட்டாம்பட்டி K உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக கீழ் கண்ட கோரிக்கைகளை கிராம சபை கூட்டம் பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது
1. குடி மராமத்து பணிகளை விவசாயிகளுக்கு வழங்க
நமது பஞ்சாயத்தில் 42க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஊரணிகள் உள்ளன. அவற்றில் முறையான குடிமராமத்து பணிகள் PWD மற்றும் BDO அலுவலகங்கள் மூலம் நடைபெறவில்லை. அதற்காக விவசாயிகள் சார்பில் பலமுறை கோரிக்கை மனு வழங்கியும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் கிராமத்தில் நிலத்தடி நீர் மிகவும் குறைந்த நிலையில் அது சார்ந்த எந்த நடவடிக்கையும் இல்லை. குடிமராமத்து பணிகளை அந்தந்த குளங்கள் சார்ந்த பாசனதாரிகள் மூலம் நடைபெற்றால் சிறந்த முறையில் நடைபெறும். எடுத்துக்காட்டாக தற்போது ஒடுங்காண் குளம் பாசனதாரிகளால் சிறந்த முறையில் குடி மராமத்து பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
2. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உலக வெப்பமயமாதலை தடுக்க மரம் நடுதல்
கொட்டாம்பட்டி K உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக 2000 மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவற்றை மேலவளவு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏரி கரைகள், சாலைகள் மற்றும் பொது இடங்களில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் உதவியுடன் நட்டு, வேலி அமைத்து பராமரிக்க வேண்டி.
3. நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் விவசாயம் சார்ந்த மற்றும் விவசாய வேலைகளுக்கு பயன்படுத்துவது
பஞ்சாயத்தில் உள்ள அனைத்து ஏரி குளங்களில் பாசன கால்வாய்கள் விவசாய வேலைகள் ஆரம்பிக்க உள்ள நிலையில் முறையான பராமரிப்பின்றி உள்ளது. அவற்றை பராமரிக்கவும் விவசாயம் சார்ந்த வேலைகளுக்கு உதவும் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை பயன்படுத்த வேண்டி
இவண்
கொட்டாம்பட்டி K உழவர் உற்பத்தியாளர் குழு, மேலவளவு
2. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உலக வெப்பமயமாதலை தடுக்க மரம் நடுதல்
கொட்டாம்பட்டி K உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக 2000 மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவற்றை மேலவளவு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏரி கரைகள், சாலைகள் மற்றும் பொது இடங்களில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் உதவியுடன் நட்டு, வேலி அமைத்து பராமரிக்க வேண்டி.
3. நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் விவசாயம் சார்ந்த மற்றும் விவசாய வேலைகளுக்கு பயன்படுத்துவது
பஞ்சாயத்தில் உள்ள அனைத்து ஏரி குளங்களில் பாசன கால்வாய்கள் விவசாய வேலைகள் ஆரம்பிக்க உள்ள நிலையில் முறையான பராமரிப்பின்றி உள்ளது. அவற்றை பராமரிக்கவும் விவசாயம் சார்ந்த வேலைகளுக்கு உதவும் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை பயன்படுத்த வேண்டி
இவண்
கொட்டாம்பட்டி K உழவர் உற்பத்தியாளர் குழு, மேலவளவு
Subscribe to:
Comments (Atom)






















