Thursday, 13 February 2020

உயிர் உரம் தயாரிப்பு பயிற்சி - மேலவளவு TN IAMP-IPM கிராம குழு


13/2/2020, நிலவள, நீர்வள திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு திட்டத்திற்கு மாதிரி கிராமமாக நமது கிராமம் தேர்வு செய்யப்பட்டு  15 பேர் கொண்ட விவசாயிகள் மேலவளவு TN IAMP-IPM கிராம  ஆர்வலர் குழுவாக அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவுக்கு வேளாண் துறை சார்பில் ட்ரைகோ ெடர்மா விரிடி மற்றும்  சூடோமோனாஸ் உயிரியல் காரணிகள் உற்பத்தி செய்ய பயிற்சி விநாயகபுரம் மாநில ஒருங்கிணைந்த உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் நோக்கம் நமது கிராமத்தில் தரமான உயிர் உரம் உற்பத்தி செய்வது.  தற்போது நமது பகுதிகளில் வாழை,நெல்,காய்கறி போன்ற தோட்டங்களில் அதிகமாக வாடல் நோய் தாக்குவதால் விவசாயிகள் உரக்கடைகளிருந்து சூடோமோனாஸ்  மற்றும் ட்ரிகோவேரிடி  வாங்கி பயன்படுத்துகின்றனர்.  ஆதலால் நமது கிராமத்திலே தரமான  உயிர் உரங்கள்  உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கிடைக்கச்செய்வது குழுவின் நோக்கமாகும்

உற்பத்தி செய்யப்படும் ட்ரைகோ ெடர்மா விரிடி மற்றும்  சூடோமோனாஸ்  போன்ற உயிர் காரணிகள் நமது  தேவைக்குபோக பிற விவசாயிகளுக்கும் விற்று கூடுதல் வருமானம் ஈட்டலாம்.








5 comments: