Friday, 7 February 2020

OCT 2019 - மேலவளவில் கூடுதல் இயக்குனர் ஆய்வு



மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வட்டாரத்தில் கூட்டு பண்ணைய திட்டம் மூலம் சிறப்பாக செயல்பட்டுவரும்   மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழுவை ஆய்வு செய்வதற்கு கூடுதல் இயக்குனர் வேளாண்மை துறை திருமதி விஜயராணி  IAS அவர்கள் வருகை செய்து  குழுவின் செயல்பாடுகளை  ஆய்வு செய்தார்.  அப்போது அவருடன் வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன், வேளாண்மை துணை இயக்குனர் காமராஜ், வேளாண்மை துணை இயக்குனர் விவேகானந்தன், வேளாண்மை துணை இயக்குனர் தனலட்சுமி, கொட்டாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் மதுரை சாமி, மதுரை வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் திருமதி  செல்வி ரமேஷ்,  உதவி பேராசிரியர் முனைவர் சீ.கிருஷ்ணகுமார், உதவி பேராசிரியர் முனைவர் உஷா ராணி , வேளாண்மை  அலுவலர் விமலா, உதவி வேளாண்மை  அலுவலர் பாலசுப்ரமணியன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை , உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரியங்கா மற்றும் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். இவ் விழாவில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்  

மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டு பண்ணையத்திட்டத்தின் நோக்கத்தையும்  அரசின் திட்டங்களையும் விவசாயிகள் பயனடையுமாறு சிறந்தமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

மேலவளவில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளை பயனடையச்செய்தது,  நவீன தோட்டக்கலை நாற்றங்கால் பண்ணை அமைத்து குறைந்த விலையில் விவசாயிகளுக்கு நாற்றுக்களை வழங்குவது, மதுரை  வேளாண் அறிவியல் நிலையம் மூலம் உளுந்து விதை பண்ணை 25 ஏக்கரில் அமைத்தது, மஹிந்த்ரா EPC நிறுவனத்துடன் விநியோகிஸ்தர் ஒப்பந்தம் செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் சொட்டு நீர் பாசனம் செய்து கொடுப்பது மற்றும் கூட்டாக இயந்திரம், விதை வாங்கி திருந்திய நெல் சாகுபடிக்காக நாற்றங்கால் தற்போது  அமைக்கப்பட்டு வருவது ஆகிய நிகழ்வுகளை கூடுதல் இயக்குனர் அவர்கள் கேட்டறிந்தார்.

கூடுதல் இயக்குனர் அவர்கள் உரையின் பொது  விவசாயிகளிடம் கூறியதாவது, மின்சார பற்றாக்குறையில் இருந்து விடுபட சூரிய மின் சக்தி மோட்டார்களை பயன்படுத்துமாறும் சிறந்த நீர் மேலாண்மைக்காக நுண்ணீர் நீர் பாசனத்தை பயன்படுத்தவும், கரும்பு சாகுபடிக்கு  சொட்டு நுண்ணீர்  பாசனத்தை பயன்படுத்தவும்  அறிவுறுத்தப்பட்டது.


மாவட்டத்தில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் குழு

அட்மா திட்டத்தின் மூலம் மாவட்ட அளவில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு சிறப்பான செயல்பாட்டிற்கு ரூபாய் 20,000/- சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. அவற்றிற்க்கான காசோலையை  கூடுதல் இயக்குனர் அவர்களிடமிருந்து குழுவின் செயலாளர் சிதம்பரம் மற்றும் பொருளாளர் சௌந்தரராஜன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்      

மேலும் இவ்விழாவில் விவசாயிகளுக்கு நெல்லிற்க்கான   இடுபொருட்கள் , தென்னை  மரம்  ஏறும்  கருவி, சோலார் விளக்கு  பொறி, இன கவர்ச்சி  பொறி  மற்றும் மஞ்சள்  வண்ண  நிற  ஓட்டும்  அட்டை  ஆகியவை  வழங்கப்பட்டன .  






No comments:

Post a Comment