Friday, 7 February 2020

அக்டோபர் 2-2019, கிராமசபை கூட்டம் மேலவளவு



அக்டோபர் 2-2019 மேலவளவில் நடைபெற்ற  கிராமசபை கூட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை கொட்டாம்பட்டி K உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக கீழ் கண்ட கோரிக்கைகளை  கிராம சபை கூட்டம் பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது

1.  குடி மராமத்து பணிகளை விவசாயிகளுக்கு வழங்க
நமது பஞ்சாயத்தில் 42க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஊரணிகள்   உள்ளன. அவற்றில் முறையான குடிமராமத்து பணிகள்  PWD மற்றும் BDO அலுவலகங்கள் மூலம் நடைபெறவில்லை. அதற்காக விவசாயிகள் சார்பில் பலமுறை கோரிக்கை மனு வழங்கியும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் கிராமத்தில்  நிலத்தடி நீர் மிகவும் குறைந்த நிலையில் அது சார்ந்த எந்த நடவடிக்கையும் இல்லை. குடிமராமத்து பணிகளை அந்தந்த குளங்கள் சார்ந்த  பாசனதாரிகள் மூலம் நடைபெற்றால்  சிறந்த முறையில் நடைபெறும். எடுத்துக்காட்டாக தற்போது ஒடுங்காண் குளம் பாசனதாரிகளால்  சிறந்த முறையில் குடி மராமத்து பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

  2. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உலக வெப்பமயமாதலை தடுக்க  மரம் நடுதல்
கொட்டாம்பட்டி K உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக 2000 மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவற்றை மேலவளவு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏரி கரைகள், சாலைகள் மற்றும் பொது இடங்களில்  நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் உதவியுடன் நட்டு,  வேலி அமைத்து பராமரிக்க வேண்டி.

3. நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் விவசாயம் சார்ந்த மற்றும் விவசாய வேலைகளுக்கு பயன்படுத்துவது
 பஞ்சாயத்தில் உள்ள அனைத்து ஏரி குளங்களில் பாசன கால்வாய்கள் விவசாய வேலைகள் ஆரம்பிக்க உள்ள நிலையில்  முறையான பராமரிப்பின்றி  உள்ளது.  அவற்றை பராமரிக்கவும் விவசாயம் சார்ந்த வேலைகளுக்கு உதவும் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை பயன்படுத்த வேண்டி

இவண்
கொட்டாம்பட்டி K உழவர் உற்பத்தியாளர் குழு, மேலவளவு 

No comments:

Post a Comment