Tuesday, 27 August 2019

மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு நாற்றங்கால் பண்ணை துவக்க விழா


ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு மேலவளவு   உழவர் உற்பத்தியாளர் குழுவின் சார்பாக  உறுப்பினராக உள்ள திரு ராஜேஷ் கண்ணா அவர்களின் தோட்டத்தில் நாற்றங்கால் பண்ணை முனைவர் திருமதி.செல்வி ரமேஷ்,திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம் மதுரை அவர்களின் தலைமையில் முனைவர் திரு. இரா.அருண் குமார், தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர்,வேளாண் அறிவியல் நிலையம் மதுரை அவர்களால் துவங்கப்பட்டது.

மேலவளவு சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள்  தற்போது தோட்ட பயிர்களான கத்தரி,தக்காளி மற்றும் மிளகாய்  நாற்றுக்களுக்கு ஓட்டன்ச்சத்திரம் மற்றும் ஆண்டிபட்டிக்கு நெடுந்தூரம் பயணம் செய்து நாற்றுகளை வாங்கிவருகின்றனர்.  மேலும் நெடுந்தூரம் மற்றும் வெப்பநிலை மாறுபாடு காரணங்களினால் நாற்றின் உயிர்  பிடிப்பு விகிதம் குறைவாக உள்ளது. 

குழுவின் நோக்கம் வேளாண்மை  மற்றும் தோட்டக்கலை துறை சார்ந்த அனைத்து பயிர்களின் நாற்றுகளை நவீன தொழில்நுட்ப முறையில் உற்பத்தி செய்து எங்கள் பகுதி விவசாயிகளிடம் தரமான நாற்றுகளை குறைவான விலைகளில்  கொண்டு சேர்ப்பது மற்றும் மகசூலை அதிகரித்து விவசாயிகளின் வருவாயை பெருக்குவது  குழுவின் நோக்கமாகும் 

அதன் பொருட்டு இன்று முனைவர் திரு. இரா.அருண் குமார் அவர்கள் முதல் மிளகாய் விதையை போட தொடர்ந்து குழு செயலாளர் சிதம்பரம், பொருளாளர் சௌந்தரராஜன் மற்றும் குழு விவசாயிகள் அனைவரும் விதையை பாவி இனிதே தொடங்கப்பட்டது.


விதை பண்ணைக்கான குழுவின்  பயணம் 
விதை பண்ணையை கருத்தில் கொண்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை கோடை கால பயிற்சியில் தோட்டக்கலை பயிர் வளர்ப்பு பற்றிய முகாமில்   நமது குழுவிலிருந்து   சௌந்தரராஜன் , கவி சர்மா மற்றும் ராஜேஷ் கண்ணா  கடந்த கோடை காலத்தில் பயிற்சி பெற்றனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் , மதுரையின் மூலம் நடத்திய ஒரு மத கால skill training program  ல் தேனீ வளர்ப்பு மற்றும் நாற்றாங்கால் பராமரிப்பு பயிற்சியை மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ் கண்ணா மற்றும் ரதிஷ்  
பெற்றுள்ளனர் . 

அதற்க்கான சான்றிதழை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க இயக்குனர்  முனைவர் ம.ஜவகர்லால் அவர்களால் வழங்கப்பட்டது.


தற்போது தோட்டக்கலையின்  தொழில் பழகுநர் ஓராண்டு பயிற்சி  திட்டத்தில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ் கண்ணா மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் பயிற்சியில் உள்ளனர்.  

இத்துடன் வேளாண்மை, தோட்டக்கலை,  வேளாண் அறிவியல் நிலையம்  உதவியுடன் மற்றும்   குழு மூத்த விவசாயிகளின் அனுபவங்களையும் மூலதனமாக கொண்டு இளம் விவசாயிகளாக ராஜேஷ் கண்ணா, பாண்டியராஜன் ,சௌந்தரராஜன் , கவி சர்மா மற்றும் ரதிஷ் ஆகியோர் விதை பண்ணையை வழிநடத்துவார். 

தேவை 
விதை, கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளை   வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் அறிவியல் நிலயத்திடம் எதிர்நோக்கியுள்ளோம் 

உணவூட்டும் விவசாயிக்கு உயிரூட்டுவோம்



JUNE 2019 - கொட்டாம்பட்டி K உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம்

கொட்டாம்பட்டி  K உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம்

    கொட்டாம்பட்டி  K  உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம் 7/6/2019, வெள்ளி கிழமை மாலை 4:00 மணியளவில்  மேலவளவு,  வீர காளி அம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்க்கு 82 உழவர் உற்பத்தியாளர் குழு  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 



    
    இந்த குழு கூட்டத்தில்  கீழ் கண்ட வேளாண் அதிகாரிகள்  வருகை தந்து சிறப்பித்தனர்.
•    திரு விவேகானந்தன்,  துணை  இயக்குனர், நீர் மேலாண்மை மற்றும் கூட்டு பண்ணை திட்டம், மதுரை 
•    திரு மதுரை சாமி, உதவி இயக்குனர், வேளாண்மை துறை, கொட்டாம்பட்டி
•    திருமதி விமலா, வேளாண் அலுவலர்,  இணை  இயக்குனர் அலுவலகம், மதுரை.
•    திரு  தனசேகரன்,  துணை வேளாண் அலுவலர்,  வேளாண்மை துறை.
•    திரு பாலசுப்ரமணியன், உதவி வேளாண் விரிவாக்க  அலுவலர் ,வேளாண்மை துறை.
•    திரு வினோத் கண்ணன் , உதவி தோட்டக்கலை விரிவாக்க  அலுவலர், தோட்டக்கலை துறை.
•    திரு பிரேம் குமார், மஹிந்திரா EPC  இண்டஸ்ட்ரீஸ் LTD , சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் .

    குழு தலைவர் திரு கே.மூக்கன் அவர்களின் வரவேற்பு உரையுடன் குழு கூட்டம் தொடங்கியது.  கொட்டாம்பட்டி  K  உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில் கீழ் கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

 
•    திருந்திய நெல் சாகுபடிக்கு களையெடுக்கும் இயந்திரம்
•    தொழி உழவுக்கு ரோட்டாவேட்டர்
•    மாவட்ட ஆட்சியர் நிதியில் இருந்து தென்னை மட்டைகளை தூளாக்கும் இயந்திரம்
•    நெல், கடலை, உளுந்து போன்ற பயிர்களுக்கு விதைப்பண்ணை அமைத்தல்

        மேலும் குழு தலைவர் ஓராண்டு கால செயல்பாடுகளை எடுத்துரைத்தார்
அவைகள் பின்வருமாறு:-
•    5 உழவர் ஆர்வலர் குழுக்களை இணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுவை அமைத்தது
•    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திதின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்தது
•    சிறு/குறு விவசாயி சான்றுகள் வேளாண் மற்றும் தோட்டக்கலை மூலம் வழங்க உதவியது
•    காசா புயலால் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் வாழைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு எடுத்து சென்று  நிவாரணம் பெற்றுத்தந்தது
•    கூட்டு பண்ணைய திட்டத்தின் மூலம் டிராக்டர் வாங்கியது.
•    துணை மின் நிலையம் கொண்டுவர உறுதுணையாக இருந்தது.
 
வேளாண் உதவி இயக்குனர்
 


    மேற்கூறிய கோரிக்கைகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் கீழ்கண்டவாறு விளக்கமளித்தார் :-
    களையெடுக்கும் இயந்திரம் .     திருந்திய நெல் சாகுபடிக்கு வழங்கப்படும் மானிய நிதியிலிருந்து ஒரு உழவர் ஆர்வலர் குழுவிற்கு 3 விதம் வழங்க வழிவகை செய்யப்படும் என்று கூறினார்கள்
     ரோட்டாவேட்டர் மற்றும் ட்ரைலர். டிக் லோன் மூலமாக வழிவகை செய்யலாம் என்று விளக்கினார் .
    தென்னை மட்டைகளை தூளாக்கும் இயந்திரம். இது வாங்குவது சம்பந்தமாக வேளாண் அலுவலர்,  இணை இயக்குனர் அலுவலகம் மூலமாக ஏற்பாடுகள் செய்வதற்கும் அதற்க்கான வழிமுறைகளை தெரிந்துகொண்டு அதற்க்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதி கூறினார்.
    விதைப்பண்ணை அமைத்தல். தற்போது நமது யூனியனில் விதை உற்பத்தி தேவைக்கு அதிகமாக உள்ளதால் மற்ற யூனியங்களுடன் தொடர்பு கொண்டு அதற்க்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதி கூறினார். அதற்க்கு முன்பாக விதை பண்ணையத்திர்கு உரிய விவசாயிகளை தேர்வு செய்யுமாறு கூறினார்.
    குழுவிற்கு வாங்கப்பட்ட பண்ணை கருவிகளை குழுவிற்குள் குத்தகை விட்டு அதன் தொகையை வங்கி கணக்கில் வைக்குமாறு அறிவுரை கூறினார் . பண்ணைக்  கருவிகளை  பயன்படுத்துவது  மற்றும்  அதனை  நிர்வகிப்பது   ஆகியவற்றிக்கான  ஒப்பந்தத்தையும்  விரைவில்  தயார்  செய்யும்படி  அறிவுரை  கூறினார்.
    நமது குழுவின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக உள்ளதாகவும் மென்மேலும் சிறப்பாக செயல்பட அறிவுறுத்தினார். மேலும் அவர்களது தரப்பில் எல்லா உதவிகளும் செய்துதரப்படும்  என்று உறுதியளித்தனர்.


வேளாண் அலுவலர் இணை  இயக்குனர் அலுவலகம், மதுரை

    விவசாயிகளின் ஒருங்கிணைப்பு, குழுவின் நோக்கம், செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். 


துணை  இயக்குனர், நீர் மேலாண்மை மற்றும் கூட்டு பண்ணை திட்டம்

    கூட்டு பண்ணையத்திட்டம் பற்றி மிக தெளிவாக விளக்கி அனைத்து விவசாயிகளையும் மெய்சிலிர்க்க வைத்தார்கள். எப்படியெல்லாம் குழுக்கள் வியாபார ரீதியாக செயல்பட்டு தங்களுடைய வருமானத்தை பெருக்கிக்கொள்ளலாம் என்று எடுத்துரைத்தார்கள். சொட்டு நீருக்கு டீலர்ஷிப் எடுப்பது, பால் பண்ணை வைப்பது, கண்மாய்களை தூர்வாருவது/ மராமத்து பார்ப்பது போன்ற பல செய்திகளை மிக அழகாக கூறினார். மேலும்  குழுவை அடுத்த கட்டத்திற்க்கு   கொண்டு செல்வதற்கும் அறிவுரை கூறினார்கள்.
 




உதவி வேளாண்/தோட்டக்கலை  விரிவாக்க  அலுவலர்கள்
    அவர்கள் விவசாயிகளின் தேவைகளை இனம்கண்டு அதற்க்கு எல்லாவிதமான உதவிகளையும் என்றும் செய்யத்தயார் என்று விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டினார்கள்.


சொட்டு நீர்/தெளிப்பு நீர் செயல் விளக்கம்
    திரு பிரேம் குமார், மஹிந்திரா EPC  இண்டஸ்ட்ரீஸ் LTD அவர்கள் தெளிப்பு நீர் செயல் விளக்கம் நேரடியாக வயலில் செய்துகாட்டினார்கள். நீர் மேலாண்மை எவ்வளவு முக்கியம் என்று விவசாயிகள் உள்வாங்கிக்கொண்டனர்.


உலக சுற்றுசூழல் தினம்
    நிறைவாக உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடவு செய்வதற்கு குழுவின் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  துணை  இயக்குனர் அவர்கள் மர கண்டுநடவை  துவக்கிவைத்தார்கள்.
 



July 2019 - அசோலா வளர்ப்பு பயிற்சி மற்றும் பயிர் காப்பீட்டுத்திட்டம் விழிப்புணர்வு முகாம்

18/07/2019 அன்று  மேலவளவு வீரகாளியம்மன் கோவில் திடலில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு  தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின்  வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை   (ATMA)  திட்டத்தின் கீழ் அசோலா வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி   மற்றும் தமிழ்நாடு வேளாண்மை துரையின்   பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் விழிப்புணர்வு முகாம் மதுரை சாமி ( உதவி இயக்குனர், வேளாண்மை துறை)  தலைமையில்  நடைபெற்றது.

இதில் பூச்சியியல் நிபுணர்  நீ செல்வம் ( வேளாண்மை உதவி இயக்குனர், பயிர் காப்பிட்டு திட்டம் , மதுரை),
 மதுரை சாமி ( உதவி இயக்குனர், வேளாண்மை துறை),
தனசேகரன் (துணை வேளாண் அலுவலர்,  வேளாண்மை துறை),
பா.ராஜதுரை (கொட்டாம்பட்டி வட்டார தொழிநுட்ப மேலாளர்),
பிரியங்கா மற்றும் கண்ணன் , கொட்டாம்பட்டி வட்டார உதவி தொழில் நுட்ப மேலாளர்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

 ராஜதுரை அவர்கள் அசோலா வளர்ப்புக்கான செயல் விளக்க திடல் அமைத்து உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளிடையே நேரடி செயல் விளக்கமளித்தார். மேலும் கால்நடைகளுக்கு அசோலாவை எவ்வாறு பயன்படுத்துவது பற்றி விவசாயிகளிடையே கலந்துரையாடினர். விவசாயிகள் அசோலாவை வளர்க்கும்போது தீவனத்துக்கான செலவு குறைகிறது. 

பூச்சியியல் நிபுணர்  நீ செல்வம் அவர்கள்  பயிர் காப்பீட்டின் அவசியத்தை பற்றி விவசாயிகளிடையே கலந்துரையாடினர். மேலும் பயிர்களில் பூச்சி மேலாண்மை பற்றி நன்மை - தீமை செய்யும் பூச்சிகளை பற்றியும், பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்து இழுக்கும் தன்மையுடைய பயிர். எடுத்துக்காட்டாக ஆமணக்கு,  மற்றும் செண்டுமல்லி உள்ளிட்டவை நன்மை செய்யும் பூச்சிகளை அதிகளவில் கவர்ந்து இழுப்பதால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பூச்சியை கட்டுப்படுத்த முடியும். பயிர்களில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த ரசாயன உரத்தை பயன்படுத்துவதைவிட, இணை மற்றும் துணை பயிர்களை வளர்த்து செலவின்றி இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளிடையே கலந்துரையாடியது சிறப்பம்சமாகும். 




Monday, 26 August 2019

May 2019 - சீரான மின்சாரம் வழங்க கோரி போராட்டம்

மேலவளவு பகுதிகளில் மின் பற்றாகுறை, விவசாயிகள் பரிதவிப்பு

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா மேலவளவு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக   மின் பலு (voltage) மிகவும் குறைவாக அதாவது 90 - 120 க்கும் குறைவாக உள்ளது. அதனால் குடிநீர், தெரு விளக்கு, வீட்டு விளக்குகள் , வீட்டு உபயோக மின் சாதனங்கள், கிணறுகளில் உள்ள முன் மோட்டார்கள் இயங்கவில்லை.

தற்போது  110/11 KV நரசிங்கம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது

கிணறுகளில் தண்ணீர் இருந்தும் தென்னை, வாழை, பருத்தி  , எள், மாட்டு தீவன புள்  ,மற்றும் தோட்ட பயிர்கள்  போன்ற பயிர்களை காப்பாற்ற முடியாத அளவுக்கு விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர். 

2013ல்  கடும் வறட்சியின் காரணமாக மேலவளவு சுற்று வட்டார கிராமங்களில்  70% த்திற்கு மேல் உள்ள தென்னை, மா, கொய்யா, எலும்பிச்சை, முந்திரி மற்றும் பழ தோட்டங்களை இழந்துள்ளோம். அப்போது காப்பாற்றிய மரங்களை   தற்போது மின்சார பற்றாக்குறையால் தணண்ணீர் இருந்தும் இழக்கும் சூழலில் உள்ளோம்.

மழையும் பொய்த்து விட்டதால் பயிர்களை காப்பாற்ற முடியாத சூழலில் உள்ளோம்.

இது சம்பந்தமாக EB யில் பலமுறை நேரில் உழவர் உற்பத்தியாளர்கள் குழு, மேலவளவு சார்பாக அணுகியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

இதனால் மேலவளவு உழவர் உற்பத்தியாளர்கள் குழு மற்றும் பொது மக்கள் சார்பாக மின் செயற்பொறியாளருக்கு  (மின் பகிர்மானம் தெற்க்கு, மேலூர்)  மனுவை நேரில் வழங்கியுள்ளோம். மேலும் இதன் நகலை 

1. உயர்திரு மேற்பார்வை பொறியாளர் அவர்கள் , மின் பகிர்மான கழகம், கே புதூர், மதுரை 

2. உயர்திரு வட்டாச்சியர் அவர்கள், மேலூர் 

3. உயர்திரு உதவி கண்காணிப்பாளர் அவர்கள், காவல் துறை, மேலூர் 

ஆகியோருக்கு நேரில் வழங்கியுள்ளோம்.

அதன் தொடர்ச்சியாக 22/05/2019 காலை 9 மணிக்கு விவசாயிகள் மேலூர் தெற்குப்பட்டி மின்சார அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தி  உள்ளோம்.

மேலும் சீரான மின்சாரம் வழங்க கோரி உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் சுற்று வட்டார கிராம பொது மக்கள் சார்பாக 03/06/2018 அன்று காலை மேலவளவு பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடை பெற இருந்த நிலையில் 2/6/2019 மதியம் 2.30 மணியளவில் வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர், மின் செயற்பொறியாளர், மின் பொறியாளர், காவல் சார்பு ஆய்வாளர் மற்றும் 7 மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் மின் துறை அதிகாரிகள் மின் அழுத்தம் குறையாமல் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்தவாரம் நடைபெறும் பராமரிப்பின் பொழுது மின் கசிவுகள் தடுக்கப்பட்டு மேலும் மின் அழுத்தம் கூட்டி தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்துள்ளனர்.

இதனால் நாளை 3-6-2019 அன்று நடை பெற இருந்த சாலை மறியல் போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது.

மேலவளவு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் குறைவான மின்சாரத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு  ஏற்பட்ட அவஸ்தைகளை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியின் வாயிலாக அரசு அதிகாரிகளின் கவனத்திற்க்கு எடுத்துச்செல்ல உதவிய அனைவருக்கும் உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 

மேலும் ஊடகத்தின் கவனத்தால் மேலவளவு துணை மின் நிலைய வேலைகள் அரசால் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

 





July 2019 - வேளாண் அறிவியல் நிலையம் களப்பயிற்சி


30/07/2019 மேலவளவு வீரகாளியம்மன் கோவில் திடலில் வேளாண் அறிவியல் நிலையம் மதுரை திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி செல்வி ரமேஷ் தலைமையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் முனைவர் திரு. இரா.அருண் குமார், முனைவர் கி.ஆனந்தி அவர்கள் முன்னிலையில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளுக்கு  களப்பயிற்சி நடத்தப்பட்டது. உழவர் உற்பத்தியாளர் குழு பொருளாளர் சௌந்தரராஜன் மற்றும், ஒருங்கிணைப்பாளர் கோபாலன் மற்றும் குழு உறுப்பினர்கள்  உடனிருந்தனர். 

 முனைவர் கி.ஆனந்தி அவர்கள் விவசாயிகளுக்கு உளுந்து விதை நேர்த்தி,  உளுந்தில் களை, நீர், பூச்சி,நோய் மற்றும்  உர  நிர்வாகம்  பற்றி விளக்கமளித்தார்.  சென்ற வாரம் உளுந்து விதைக்கப்பட்ட நிலங்களை பார்வையிட்டார் 

காய்கறி சாகுபடி பயிற்சி 
 முனைவர் திரு. இரா.அருண் குமார் அவர்கள் காய்கறி சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி  விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார். மேலும்  காய்கறி விதை நேர்த்தி, தட்டு முறையில் நாற்றங்கால் அமைத்து பராமரிப்பது சம்பந்தமான தொழில்நுட்பங்களை நேரடியாக  செயல்விளக்கமளித்தனர்.

தோட்ட பயிர் நோய் மற்றும் பூச்சிகள் சம்பந்தமாக விவசாயிகளின் கேள்விகளுக்கு காரணம் மற்றும் நிவர்த்திக்காக ஆலோசனைகளை வழங்கினர்.

மிளகாய் சாகுபடி 
மேலவளவு பகுதிகளுக்கு ஏற்ற மிளகாய் ரகங்களை விவசாயிகளே  கண்டறிய செயல் விளக்க திடல் அமைக்க 4 விவசாயிகளுக்கு (70 செண்ட்டிற்க்கான 2 வேளாண்மை கல்லூரின்  ரக  விதை வீதம்) மிளகாய் விதை வேளாண் அறிவியல் நிலையத்தால்  வழங்கப்பட்டது.  30 செண்ட்டிற்க்கான விதையை கடந்த காலங்களில் பயிரிடப்பட்ட ரகங்களை வாங்கிக்கொண்டு ஒவ்வொரு விவசாயியும் தனித்தனியாக 3 ரகங்களையும் ஒரு ஏக்கரில்  பயிரிடவேண்டும்.  இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பகுதிக்கு  ஏற்ற அதிக மகசூல் தரும் ரகத்தினை தாங்களே  கண்டறிந்து வரும் காலங்களில் சாகுபடி செய்ய உதவியாக இருக்கும் என முனைவர் திரு. இரா.அருண் குமார் அவர்கள் விளக்கமளித்தார்.

இதேபோல் 2 வெண்டை ரக விதைகளையும் வழங்கினார்.

துணை வேளாண்மை இயக்குனர் வருகை 
நேற்று திரு காமராஜ், துணை வேளாண்மை இயக்குனர், மத்திய திட்டம், மதுரை மற்றும் திரு மதுரை சாமி, உதவி இயக்குனர் அவர்கள்  நமது குழுவிற்கு வருகை தந்து விவசாயிகளிடையே கலந்துரையாடினார்கள்.

அப்போது குழுவின் செயல்பாடுகள், சொட்டு நீர் பாசனத்திர்கான  டீலர் ஷிப் , இடுபொருள் விற்பனை நிலையம் அமைப்பதற்க்கான விதிமுறைகள், ரோட்டாவேட்டர் மற்றும்  தென்னை மட்டை அரைக்கும் கருவி வாங்குவதற்க்காக ஆலோசனைகளை குழு உறுப்பினர்களுக்கு  வழங்கினார்கள்.

உழவர் உற்பத்தியாளர் கம்பெனி அமைப்பதற்க்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிக்கப்பட்டன




June 2019 - நுண்ணுயிர் உரம் மற்றும் நுண்ணுயிர் பாசனம் குறித்த ஆலோசனை கூட்டம்


28/6/2019 அன்று மேலவளவு வீரகாளியம்மன் கோவில் திடலில் கூட்டு பண்ணைய திட்டம்,  நுண்ணுயிர் உரம், நுண்ணுயிர் பாசனம் மற்றும்  உழவன் செயலி  குறித்த ஆலோசனை கூட்டம் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக நடைபெற்றது.

இதில் 

  • திருமதி  விஜய லெட்சுமி, துணை வேளாண்மை இயக்குனர், மத்திய திட்டம், மதுரை    
  • திரு மதுரை சாமி, உதவி இயக்குனர், வேளாண்மை துறை, கோட்டம்பட்டி 
  • முனைவர் ரெ.உமாசங்கரேஸ்வரி, உதவி பேராசிரியர், வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மதுரை
  • முனைவர் மு.ஜெயபாரதி, உதவி பேராசிரியர், வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை
  • திரு பாலசுப்ரமணியன், உதவி வேளாண்மை  அலுவலர் ,வேளாண்மை துறை

உள்ளிட்டோர் பங்கேற்று விவசாயிகள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கினார்

இதில் திருமதி விஜய லெட்சுமி அவர்கள்  கூட்டு பண்ணைய  திட்டம் குறித்த பலன்களை பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்

திரு மதுரை சாமி அவர்கள் உழவன் செயலி மற்றும் நுண்ணுயிர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

முனைவர் ரெ.உமாசங்கரேஸ்வரி  தலைமையில் வேர் உட்பூசண  நுண்ணுயிர் உரம் முக்கியத்துவம் மற்றும் உபயோக திறன் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார் .


முனைவர் மு.ஜெயபாரதி  தலைமையில் பயிரின் வளர்ச்சிக்கு ஏற்ப திரவ   நுண்ணுயிர் உரம் முக்கியத்துவம் மற்றும் உபயோக திறன் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார் .

மேலும் ரசாயன உர பயன்பட்டால் நிலத்திற்க்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் அதை சரிசெய்வதற்க்கான ஆலோசனை, வறட்சியில் பயிர் பாதுகாப்பு போன்ற விவாதங்கள் நடைபெற்றன.



Thursday, 15 August 2019

AUG 2019 - மேலவளவு கிராம சபை கூட்டம்


இன்று (15-08-2019) காலை 11 மணியளவில்  மேலவளவு வீரகாளி அம்மன் கோவில் திடலில்  கிராம சபை கூட்டம் நடைபெற்றது .

 கூட்டத்தில் பொதுமக்கள் , கொட்டாம்பட்டி K  உழவர் உற்பத்தியாளர்  குழு,மேலவளவு  உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்கள்  கோரிக்கைகளை கிராம சபை கூட்ட தீர்மானத்திர்காக  கிராம சபை கூட்ட பொறுப்பாளரிடம் வழங்கினார்கள் .

கூட்டத்திற்கு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை  ரா.ராஜபாண்டி அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடையே சொட்டுநீர் பாசனம் மற்றும் மானிய முறையில் ஆழதுளை கிணறு அமைப்பது சம்பந்தமாக விவசாயிகளிடையே உரையாடினார்

உழவர் உற்பத்தியாளர்  குழு  கோரிக்கைகள் ,

•    தொடக்கப்பள்ளி அருகே பயன்பாடற்று ஆபத்தான நிலையில் உள்ள நீர் தேக்க தொட்டியை அப்புறப்படுத்துதல். பயன்பாட்டில் உள்ள தொட்டிகளை முறையாக வேலி அமைத்து பராமரிக்க வேண்டி

•    கிராம குப்பைகளை முறையாக கையாளுதல்,முறையான திட கழிவு மேலாண்மைகிராமத்தில் அங்கங்கே புதிதாக  ஆழ்துளை கிணறுகளை அமைக்காமல் தற்போதுள்ள கிணறுகளை முறையாக பராமரித்து பயன்படுத்துதல்

•    ஒடுங்காண் குளம் பாசானதாரிகளால்   சிறந்த முறையில் குடி மராமத்து பணிகள் மூலம் குளத்தின் கரைகளை உயரமாகவும் அகலமாகவும் வேலை செய்துள்ளனர். அவற்றில் மர கன்றுகள், பனை விதைகள் விதைத்து பராமரிக்க ஒடுங்காண் குளம் கரையில் பயன்பாடற்று கிடைக்கும்  பஞ்சாயத்துக்கு சொந்தமான  ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டரை சரிசெய்யது வழங்க வேண்டி

•    தற்போது நமது கிராமத்தில் நெல் ,வாழை மற்றும் தென்னைக்கு மட்டும் பயிர்காப்பீடு செய்யும் வசதியுள்ளது.அனால் கத்தரி, தக்காளி ,மிளகாய் ,வெண்டை, பருத்தி , எள் ,உளுந்து மற்றும் கடலை அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்றன.    ஆதலால் மேலே உள்ள அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு செய்யும் வசதியை வழங்க வேண்டி

•    கிராமத்தில் உள்ள அனைத்து  ஆழ்துளை கிணறுகள், தெரு விளக்குகள் முறையாக பராமரித்தல்

•    சுடுகாட்டில் பயன்பாடற்று கிடைக்கும் பஞ்சாயத்துக்கு சொந்தமான  ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டரை சரிசெய்யது பயன்பாட்டிற்கு வழங்குவது, மேலும் தற்போதுள்ள வறட்சியான சூழ்நிலையில் கால்நடைகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும்

•    நமது பகுதியில் நிலத்தடி நீரை உயர்த்த கிராமத்தில் உள்ள அனைத்து அரசு சார்ந்த கட்டிடங்களிலும் முறையான மழை நீர் சேகரிப்பு வசதியை செய்ய வேண்டி மேலும் கிராமத்தில் உள்ள அணைத்து வீடுகளிலும் முறையான மழை நீர் சேகரிப்பு வசதியை செய்ய உதவ வேண்டி

•    நமது கிராமத்தில் உள்ள அனைத்து பொது மற்றும் விவசாய கிணறுகளை பராமரித்து மழை நீர் சேகரிக்க உதவ வேண்டி

•    நமது கிராமத்தின் பசுமை சூழ்நிலை மேம்படுத்தும் விதமாக ஏரி , குளம் ,குட்டை கரைகள் மற்றும் சாலை ஓரங்களில் நம் நாட்டு மரங்கள், பனை விதைகள் நடவு செய்து பராமரிக்க வேண்டி 

•    நமது கிராமத்து விவசாய நிலங்களில் வேளாண்மை பணி செய்ய, கிராம குளத்தில் உள்ள பாசன கால்வாய்களை பராமரிப்பு பணி செய்ய 100 நாள் பணியாளர்களை ஈடுபடுத்த முயற்சி செய்யவேண்டும்

•    நமது  கிராமத்தில் உள்ள ஏரி ,குளம் ,குட்டைகளை  தூர்வாரி ஆழப்படுத்தி நீர் வழி பாதையை சீர்செய்து ஓடைகளை மறுகட்டமைப்பு செய்து நீர் தங்கு தடையில்லாமல் செல்ல வழிவகை செய்ய வேண்டி

•    நமது கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட

•    தண்ணீர் சிக்கனத்தை கிராம மக்களுக்கு அறிவுறுத்தல்

•    நம் கிராம விவசாயிகளுக்கு நல்ல விலைகிடைக்க வார சந்தையில் விற்பனை நிலையங்கள் , பயனாளிகளை அதிகப்படுத்த

•    நமது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இரசாயன   மருந்துகளை தவிர்த்து இயற்கை வேளாண்மையை தீவிரப்படுத்த

மேற்கண்ட கோரிக்கைகளை மனுவாக குழு செயலாளர் திரு சிதம்பரம் மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு சிவஞானம் அவர்கள் கிராம சபை பொறுப்பாளரிடம் வழங்கினார்கள்






Wednesday, 14 August 2019

July 2019 - ஆடிப்பட்டம் - இறவையில் உளுந்து விதைப்பண்ணைக்காக சாகுபடி

23-July-2019

மேலவளவில் உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகள் சார்பாக உளுந்து விதைப்பண்ணைக்காக 25 ஏக்கர்  விளை நிலங்களை வேளாண் அறிவியல் நிலையம் மதுரை  தேர்வு செய்து அதற்க்கான நேற்று விதைப்பு ஆரம்பிக்கப்பட்டது .

வேளாண் அறிவியல் நிலையம் மதுரை  திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ் தலைமையில்   முனைவர் கி.ஆனந்தி மற்றும் முனைவர் ஆரோக்கிய மேரி  முன்னிலையில் நேற்று விதைப்புக்கான நேரடி செயல்விளக்கம் திரு அ.மலைச்சாமி அவர்கள் வயலில் டிராக்டரில் பொருத்தப்பட்ட விதை விதைப்பு இயந்திரம் மூலம் விவசாயிகளுக்கு நேரடியாக செய்துகாட்டினார்.

நிலம் தயாரித்தல், விதையளவு, விதை நேர்த்தி,  நீர் மேலாண்மை, உர  மேலாண்மை, களை நிர்வாகம், அறுவடை நுட்பங்கள், விதை சுத்திகரிப்பு, விதை சேமிப்பு   மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் சம்பந்தமாக விவசாயிகளுக்கு  எளிய முறையில் விளக்கமளித்தனர்.

விதை நேர்த்தி:
ஒரு ஏக்கருக்கு வம்பன் 8 ரக 8 கிலோ விதைகள் ,  உயிர் உரவிதை, நேர்த்திசெய்ய ரைசோபியம், சூடோமோனாஸ்  ஆகியவைகள் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. 

நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு உயிர்த் தண்ணீர் மூன்றாவது நாளிலும் பாய்ச்ச வேண்டும். காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பயிரின் எல்லா நிலைகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார் 

மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு செயலாளர் சிதம்பரம் மற்றும் பொருலாளர் சௌந்தர ராஜன்  விதை விதைப்பு இயந்திரத்தில் விதைகளை நிரப்பி விதைப்பை தொடங்கிவைத்தனர்.