23-July-2019
மேலவளவில் உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகள் சார்பாக உளுந்து விதைப்பண்ணைக்காக 25 ஏக்கர் விளை நிலங்களை வேளாண் அறிவியல் நிலையம் மதுரை தேர்வு செய்து அதற்க்கான நேற்று விதைப்பு ஆரம்பிக்கப்பட்டது .
வேளாண் அறிவியல் நிலையம் மதுரை திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ் தலைமையில் முனைவர் கி.ஆனந்தி மற்றும் முனைவர் ஆரோக்கிய மேரி முன்னிலையில் நேற்று விதைப்புக்கான நேரடி செயல்விளக்கம் திரு அ.மலைச்சாமி அவர்கள் வயலில் டிராக்டரில் பொருத்தப்பட்ட விதை விதைப்பு இயந்திரம் மூலம் விவசாயிகளுக்கு நேரடியாக செய்துகாட்டினார்.
நிலம் தயாரித்தல், விதையளவு, விதை நேர்த்தி, நீர் மேலாண்மை, உர மேலாண்மை, களை நிர்வாகம், அறுவடை நுட்பங்கள், விதை சுத்திகரிப்பு, விதை சேமிப்பு மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் சம்பந்தமாக விவசாயிகளுக்கு எளிய முறையில் விளக்கமளித்தனர்.
விதை நேர்த்தி:
ஒரு ஏக்கருக்கு வம்பன் 8 ரக 8 கிலோ விதைகள் , உயிர் உரவிதை, நேர்த்திசெய்ய ரைசோபியம், சூடோமோனாஸ் ஆகியவைகள் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு உயிர்த் தண்ணீர் மூன்றாவது நாளிலும் பாய்ச்ச வேண்டும். காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பயிரின் எல்லா நிலைகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு செயலாளர் சிதம்பரம் மற்றும் பொருலாளர் சௌந்தர ராஜன் விதை விதைப்பு இயந்திரத்தில் விதைகளை நிரப்பி விதைப்பை தொடங்கிவைத்தனர்.

No comments:
Post a Comment