இன்று (15-08-2019) காலை 11 மணியளவில் மேலவளவு வீரகாளி அம்மன் கோவில் திடலில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது .
கூட்டத்தில் பொதுமக்கள் , கொட்டாம்பட்டி K உழவர் உற்பத்தியாளர் குழு,மேலவளவு உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை கிராம சபை கூட்ட தீர்மானத்திர்காக கிராம சபை கூட்ட பொறுப்பாளரிடம் வழங்கினார்கள் .
கூட்டத்திற்கு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை ரா.ராஜபாண்டி அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடையே சொட்டுநீர் பாசனம் மற்றும் மானிய முறையில் ஆழதுளை கிணறு அமைப்பது சம்பந்தமாக விவசாயிகளிடையே உரையாடினார்
உழவர் உற்பத்தியாளர் குழு கோரிக்கைகள் ,
• தொடக்கப்பள்ளி அருகே பயன்பாடற்று ஆபத்தான நிலையில் உள்ள நீர் தேக்க தொட்டியை அப்புறப்படுத்துதல். பயன்பாட்டில் உள்ள தொட்டிகளை முறையாக வேலி அமைத்து பராமரிக்க வேண்டி
• கிராம குப்பைகளை முறையாக கையாளுதல்,முறையான திட கழிவு மேலாண்மைகிராமத்தில் அங்கங்கே புதிதாக ஆழ்துளை கிணறுகளை அமைக்காமல் தற்போதுள்ள கிணறுகளை முறையாக பராமரித்து பயன்படுத்துதல்
• ஒடுங்காண் குளம் பாசானதாரிகளால் சிறந்த முறையில் குடி மராமத்து பணிகள் மூலம் குளத்தின் கரைகளை உயரமாகவும் அகலமாகவும் வேலை செய்துள்ளனர். அவற்றில் மர கன்றுகள், பனை விதைகள் விதைத்து பராமரிக்க ஒடுங்காண் குளம் கரையில் பயன்பாடற்று கிடைக்கும் பஞ்சாயத்துக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டரை சரிசெய்யது வழங்க வேண்டி
• தற்போது நமது கிராமத்தில் நெல் ,வாழை மற்றும் தென்னைக்கு மட்டும் பயிர்காப்பீடு செய்யும் வசதியுள்ளது.அனால் கத்தரி, தக்காளி ,மிளகாய் ,வெண்டை, பருத்தி , எள் ,உளுந்து மற்றும் கடலை அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்றன. ஆதலால் மேலே உள்ள அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு செய்யும் வசதியை வழங்க வேண்டி
• கிராமத்தில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகள், தெரு விளக்குகள் முறையாக பராமரித்தல்
• சுடுகாட்டில் பயன்பாடற்று கிடைக்கும் பஞ்சாயத்துக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டரை சரிசெய்யது பயன்பாட்டிற்கு வழங்குவது, மேலும் தற்போதுள்ள வறட்சியான சூழ்நிலையில் கால்நடைகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும்
• நமது பகுதியில் நிலத்தடி நீரை உயர்த்த கிராமத்தில் உள்ள அனைத்து அரசு சார்ந்த கட்டிடங்களிலும் முறையான மழை நீர் சேகரிப்பு வசதியை செய்ய வேண்டி மேலும் கிராமத்தில் உள்ள அணைத்து வீடுகளிலும் முறையான மழை நீர் சேகரிப்பு வசதியை செய்ய உதவ வேண்டி
• நமது கிராமத்தில் உள்ள அனைத்து பொது மற்றும் விவசாய கிணறுகளை பராமரித்து மழை நீர் சேகரிக்க உதவ வேண்டி
• நமது கிராமத்தின் பசுமை சூழ்நிலை மேம்படுத்தும் விதமாக ஏரி , குளம் ,குட்டை கரைகள் மற்றும் சாலை ஓரங்களில் நம் நாட்டு மரங்கள், பனை விதைகள் நடவு செய்து பராமரிக்க வேண்டி
• நமது கிராமத்து விவசாய நிலங்களில் வேளாண்மை பணி செய்ய, கிராம குளத்தில் உள்ள பாசன கால்வாய்களை பராமரிப்பு பணி செய்ய 100 நாள் பணியாளர்களை ஈடுபடுத்த முயற்சி செய்யவேண்டும்
• நமது கிராமத்தில் உள்ள ஏரி ,குளம் ,குட்டைகளை தூர்வாரி ஆழப்படுத்தி நீர் வழி பாதையை சீர்செய்து ஓடைகளை மறுகட்டமைப்பு செய்து நீர் தங்கு தடையில்லாமல் செல்ல வழிவகை செய்ய வேண்டி
• நமது கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட
• தண்ணீர் சிக்கனத்தை கிராம மக்களுக்கு அறிவுறுத்தல்
• நம் கிராம விவசாயிகளுக்கு நல்ல விலைகிடைக்க வார சந்தையில் விற்பனை நிலையங்கள் , பயனாளிகளை அதிகப்படுத்த
• நமது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இரசாயன மருந்துகளை தவிர்த்து இயற்கை வேளாண்மையை தீவிரப்படுத்த
மேற்கண்ட கோரிக்கைகளை மனுவாக குழு செயலாளர் திரு சிதம்பரம் மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு சிவஞானம் அவர்கள் கிராம சபை பொறுப்பாளரிடம் வழங்கினார்கள்





No comments:
Post a Comment