Friday, 9 August 2019

AUG 2019 மேலவளவில் குறு சிறு விவசாயிகள் சான்று முகாம்







9/8/2019, வெள்ளி கிழமை மேலவளவில் உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில் சிறு விவசாயிகள் சான்று வழங்கும் முகாம், நுண்ணீர் பாசன திட்ட விண்ணப்ப மேளா, நடமாடும் மண் பரிசோதனை முகாம், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் வழங்கும்  50% மானியத்தில் ஆழ்துளை-கிணறு, பாசன குழாய்கள், மின் மோட்டார்கள்   பெற தகுதியானவர்களுக்கு பதிவு   ஆகியவை  நடைபெற்றது.

குழுவின் செயலாளர் சிதம்பரம்  தலைமையில் குழுவின் பொருளாளர் சௌந்தரராஜன் மற்றும் குழு உறுப்பினர்கள்  முன்னிலையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வுகளில் 500க்கும் மேற்பட்ட மேலவளவு பிர்கா  விவசாயிகள் கலந்துகொண்டனர். 200க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வருவாய் துறை அதிகாரிகள் உடனடியாக குறு சிறு விவசாயிகள் சான்று வழங்கப்பட்டது சிறப்பம்சமாகும் 

மேலும் அடங்கல்  தேவைப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் நேரடியாக வழங்கி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த நுண்ணீர் பாசன திட்ட விண்ணப்ப பதிவிற்கு உதவினார். 

நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை  ரா.ராஜபாண்டி அவர்கள் விவசாயிகளிடையே 50% மானியத்தில் ஆழ்துளை-கிணறு, பாசன குழாய்கள், மின் மோட்டார்கள்   பெற விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். 

முகாமிற்கு வந்த அனைத்து விவசாயிகளும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தை பார்வையிட்டனர். நிர்வாகிகள் விவசாயிகளுக்கு மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.  மேலும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களின் மண் மாதிரி மற்றும் தண்ணீர் மாதிரிகளை கொண்டுவந்து  நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் சோதனை அறிக்கையை பெற்றுக்கொண்டனர் 

வருகை தந்த அதிகாரிகள்   


வருவாய் துறை 
  • லெட்சுமி பிரியா மண்டல துணை வட்டாட்சியர், கொட்டாம்பட்டி ஒன்றியம் 
  • ஸ்ரீதர் , வருவாய் ஆய்வாளர்,மேலவளவு பிர்கா
  • சண்முகசுந்தரம் , எட்டிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர்
  • ராமர் , சென்னகரம்பட்டி கிராம நிர்வாக அலுவலர்
  • நாகராஜன்,மேலவளவு  கிராம நிர்வாக அலுவலர் 
  • சரவணன், கேசம்பட்டி கிராம நிர்வாக அலுவலர்
  • காளிதாஸ் , பட்டூர் கிராம நிர்வாக அலுவலர்
  • அழகுராஜா, சேக்கிபட்டி கிராம நிர்வாக அலுவலர்
  • தீபன் சக்கரவர்த்தி , கம்பூர் கிராம நிர்வாக அலுவலர்
  
வேளாண் துறை 

  • மதுரை சாமி, வேளாண்மை உதவி இயக்குனர்  
  • பாலசுப்ரமணியன், உதவி வேளாண்மை  அலுவலர் 

தோட்டக்கலை துறை 

  • R.ராஜி, உதவி இயக்குனர் 
  • N பாஸ்கர்ராஜா , DHO 
  • கே.சண்முகவேல் , உதவி தோட்டக்கலை துறை  அலுவலர் 
  • வினோத் கண்ணன் , உதவி தோட்டக்கலை துறை  அலுவலர் 
  • G .கற்பகம் , உதவி தோட்டக்கலை துறை  அலுவலர் 

நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை


 ரா.ராஜபாண்டி  நீர்வடிப்பகுதி வளர்ச்சி அணி உறுப்பினர்

நடமாடும் மண் பரிசோதனை நிலையம் 


V .மோகன் குமார் , வேளாண்மை  அலுவலர்






3 comments: