கொட்டாம்பட்டி K உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம்
கொட்டாம்பட்டி K உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம் 7/6/2019, வெள்ளி கிழமை மாலை 4:00 மணியளவில் மேலவளவு, வீர காளி அம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு 82 உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த குழு கூட்டத்தில் கீழ் கண்ட வேளாண் அதிகாரிகள் வருகை தந்து சிறப்பித்தனர்.
• திரு விவேகானந்தன், துணை இயக்குனர், நீர் மேலாண்மை மற்றும் கூட்டு பண்ணை திட்டம், மதுரை
• திரு மதுரை சாமி, உதவி இயக்குனர், வேளாண்மை துறை, கொட்டாம்பட்டி
• திருமதி விமலா, வேளாண் அலுவலர், இணை இயக்குனர் அலுவலகம், மதுரை.
• திரு தனசேகரன், துணை வேளாண் அலுவலர், வேளாண்மை துறை.
• திரு பாலசுப்ரமணியன், உதவி வேளாண் விரிவாக்க அலுவலர் ,வேளாண்மை துறை.
• திரு வினோத் கண்ணன் , உதவி தோட்டக்கலை விரிவாக்க அலுவலர், தோட்டக்கலை துறை.
• திரு பிரேம் குமார், மஹிந்திரா EPC இண்டஸ்ட்ரீஸ் LTD , சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் .
குழு தலைவர் திரு கே.மூக்கன் அவர்களின் வரவேற்பு உரையுடன் குழு கூட்டம் தொடங்கியது. கொட்டாம்பட்டி K உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில் கீழ் கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
• திருந்திய நெல் சாகுபடிக்கு களையெடுக்கும் இயந்திரம்
• தொழி உழவுக்கு ரோட்டாவேட்டர்
• மாவட்ட ஆட்சியர் நிதியில் இருந்து தென்னை மட்டைகளை தூளாக்கும் இயந்திரம்
• நெல், கடலை, உளுந்து போன்ற பயிர்களுக்கு விதைப்பண்ணை அமைத்தல்
மேலும் குழு தலைவர் ஓராண்டு கால செயல்பாடுகளை எடுத்துரைத்தார்
அவைகள் பின்வருமாறு:-
• 5 உழவர் ஆர்வலர் குழுக்களை இணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுவை அமைத்தது
• தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திதின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்தது
• சிறு/குறு விவசாயி சான்றுகள் வேளாண் மற்றும் தோட்டக்கலை மூலம் வழங்க உதவியது
• காசா புயலால் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் வாழைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு எடுத்து சென்று நிவாரணம் பெற்றுத்தந்தது
• கூட்டு பண்ணைய திட்டத்தின் மூலம் டிராக்டர் வாங்கியது.
• துணை மின் நிலையம் கொண்டுவர உறுதுணையாக இருந்தது.
வேளாண் உதவி இயக்குனர்
மேற்கூறிய கோரிக்கைகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் கீழ்கண்டவாறு விளக்கமளித்தார் :-
களையெடுக்கும் இயந்திரம் . திருந்திய நெல் சாகுபடிக்கு வழங்கப்படும் மானிய நிதியிலிருந்து ஒரு உழவர் ஆர்வலர் குழுவிற்கு 3 விதம் வழங்க வழிவகை செய்யப்படும் என்று கூறினார்கள்
ரோட்டாவேட்டர் மற்றும் ட்ரைலர். டிக் லோன் மூலமாக வழிவகை செய்யலாம் என்று விளக்கினார் .
தென்னை மட்டைகளை தூளாக்கும் இயந்திரம். இது வாங்குவது சம்பந்தமாக வேளாண் அலுவலர், இணை இயக்குனர் அலுவலகம் மூலமாக ஏற்பாடுகள் செய்வதற்கும் அதற்க்கான வழிமுறைகளை தெரிந்துகொண்டு அதற்க்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதி கூறினார்.
விதைப்பண்ணை அமைத்தல். தற்போது நமது யூனியனில் விதை உற்பத்தி தேவைக்கு அதிகமாக உள்ளதால் மற்ற யூனியங்களுடன் தொடர்பு கொண்டு அதற்க்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதி கூறினார். அதற்க்கு முன்பாக விதை பண்ணையத்திர்கு உரிய விவசாயிகளை தேர்வு செய்யுமாறு கூறினார்.
குழுவிற்கு வாங்கப்பட்ட பண்ணை கருவிகளை குழுவிற்குள் குத்தகை விட்டு அதன் தொகையை வங்கி கணக்கில் வைக்குமாறு அறிவுரை கூறினார் . பண்ணைக் கருவிகளை பயன்படுத்துவது மற்றும் அதனை நிர்வகிப்பது ஆகியவற்றிக்கான ஒப்பந்தத்தையும் விரைவில் தயார் செய்யும்படி அறிவுரை கூறினார்.
நமது குழுவின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக உள்ளதாகவும் மென்மேலும் சிறப்பாக செயல்பட அறிவுறுத்தினார். மேலும் அவர்களது தரப்பில் எல்லா உதவிகளும் செய்துதரப்படும் என்று உறுதியளித்தனர்.
வேளாண் அலுவலர் இணை இயக்குனர் அலுவலகம், மதுரை
விவசாயிகளின் ஒருங்கிணைப்பு, குழுவின் நோக்கம், செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
துணை இயக்குனர், நீர் மேலாண்மை மற்றும் கூட்டு பண்ணை திட்டம்
கூட்டு பண்ணையத்திட்டம் பற்றி மிக தெளிவாக விளக்கி அனைத்து விவசாயிகளையும் மெய்சிலிர்க்க வைத்தார்கள். எப்படியெல்லாம் குழுக்கள் வியாபார ரீதியாக செயல்பட்டு தங்களுடைய வருமானத்தை பெருக்கிக்கொள்ளலாம் என்று எடுத்துரைத்தார்கள். சொட்டு நீருக்கு டீலர்ஷிப் எடுப்பது, பால் பண்ணை வைப்பது, கண்மாய்களை தூர்வாருவது/ மராமத்து பார்ப்பது போன்ற பல செய்திகளை மிக அழகாக கூறினார். மேலும் குழுவை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு செல்வதற்கும் அறிவுரை கூறினார்கள்.
உதவி வேளாண்/தோட்டக்கலை விரிவாக்க அலுவலர்கள்
அவர்கள் விவசாயிகளின் தேவைகளை இனம்கண்டு அதற்க்கு எல்லாவிதமான உதவிகளையும் என்றும் செய்யத்தயார் என்று விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டினார்கள்.
சொட்டு நீர்/தெளிப்பு நீர் செயல் விளக்கம்
திரு பிரேம் குமார், மஹிந்திரா EPC இண்டஸ்ட்ரீஸ் LTD அவர்கள் தெளிப்பு நீர் செயல் விளக்கம் நேரடியாக வயலில் செய்துகாட்டினார்கள். நீர் மேலாண்மை எவ்வளவு முக்கியம் என்று விவசாயிகள் உள்வாங்கிக்கொண்டனர்.
உலக சுற்றுசூழல் தினம்
நிறைவாக உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடவு செய்வதற்கு குழுவின் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. துணை இயக்குனர் அவர்கள் மர கண்டுநடவை துவக்கிவைத்தார்கள்.

No comments:
Post a Comment