Saturday, 10 August 2019

June 2019 மேலவளவில் திருந்திய நெல் சாகுபடி நாற்றங்கால் பயிற்சி

மேலவளவில் திருந்திய நெல் சாகுபடிக்காக எந்திரம் நடவுக்கு பாய் நாற்றங்கால் பயிற்சி  

பெரும்பாலும் மேலவளவு பகுதிகளில்  விவசாயிகள்  சாதாரண நடவு முறையில் நெல் சாகுபடி செய்துவருகின்றனர். ஆதலால் திருந்திய நெல் சாகுபடி என்னும் ஒற்றை நாற்று நடவு முறைக்கு ஆலோசனைகள் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு வேளாண்மை துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று காலை  திரு தெய்வேந்திரன் அவர்கள் நாற்றங்காலில் திருந்திய நெல் சாகுபடிக்கு எந்திரம் மூலம் நடவுக்கு நாற்றங்கால் பயிற்சி மற்றும்  திருந்திய  நெல்சாகுபடிமுறையை விவசாயிகள் ஏன் கடைபிடிக்க வேண்டும் என்பதர்கான விளக்கத்தை திரு பாலசுப்ரமணியன், உதவி வேளாண்மை  அலுவலர் ,வேளாண்மை துறை  அவர்கள் குழு உறுப்பினர்களுக்கு விளக்கினார். 

அவைகள் வருமாறு
  • ஏக்கருக்கு 2-3 கிலோ விதை போதுமானது.
  • ஏக்கருக்கு 1 சென்ட் நாற்றங்கால் போதுமானது.
  • குத்துக்கு ஒரு நாற்று போதுமானது
  • குறைந்த சாகுபடிச் செலவு
  • களையைக் கட்டுப்படுத்த களைக் கருவி உபயோகிப்பதால் ஆட்செலவு குறைவு
  • பாசன நீர்த் தேவை 40 - 50 சதவீதம் குறைவு
  • அதிக வேர் வளர்ச்சி
  • அதிக கதிர்கள், அதிக மணிகள்
  • அதிக தானிய, வைக்கோல் மகசூல்
  • அதிக லாபம்
  • எளிதான பூச்சி மேலாண்மை

மேலும் அடுத்த 15வது நாளில் நாடாவுக்கான செயல் விளக்க பயிற்சி  திரு தெய்வேந்திரன் அவர்கள் வயலில் நடைபெறும் என்று தெரிவித்தார்





No comments:

Post a Comment