Monday, 26 August 2019

July 2019 - வேளாண் அறிவியல் நிலையம் களப்பயிற்சி


30/07/2019 மேலவளவு வீரகாளியம்மன் கோவில் திடலில் வேளாண் அறிவியல் நிலையம் மதுரை திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி செல்வி ரமேஷ் தலைமையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் முனைவர் திரு. இரா.அருண் குமார், முனைவர் கி.ஆனந்தி அவர்கள் முன்னிலையில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளுக்கு  களப்பயிற்சி நடத்தப்பட்டது. உழவர் உற்பத்தியாளர் குழு பொருளாளர் சௌந்தரராஜன் மற்றும், ஒருங்கிணைப்பாளர் கோபாலன் மற்றும் குழு உறுப்பினர்கள்  உடனிருந்தனர். 

 முனைவர் கி.ஆனந்தி அவர்கள் விவசாயிகளுக்கு உளுந்து விதை நேர்த்தி,  உளுந்தில் களை, நீர், பூச்சி,நோய் மற்றும்  உர  நிர்வாகம்  பற்றி விளக்கமளித்தார்.  சென்ற வாரம் உளுந்து விதைக்கப்பட்ட நிலங்களை பார்வையிட்டார் 

காய்கறி சாகுபடி பயிற்சி 
 முனைவர் திரு. இரா.அருண் குமார் அவர்கள் காய்கறி சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி  விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார். மேலும்  காய்கறி விதை நேர்த்தி, தட்டு முறையில் நாற்றங்கால் அமைத்து பராமரிப்பது சம்பந்தமான தொழில்நுட்பங்களை நேரடியாக  செயல்விளக்கமளித்தனர்.

தோட்ட பயிர் நோய் மற்றும் பூச்சிகள் சம்பந்தமாக விவசாயிகளின் கேள்விகளுக்கு காரணம் மற்றும் நிவர்த்திக்காக ஆலோசனைகளை வழங்கினர்.

மிளகாய் சாகுபடி 
மேலவளவு பகுதிகளுக்கு ஏற்ற மிளகாய் ரகங்களை விவசாயிகளே  கண்டறிய செயல் விளக்க திடல் அமைக்க 4 விவசாயிகளுக்கு (70 செண்ட்டிற்க்கான 2 வேளாண்மை கல்லூரின்  ரக  விதை வீதம்) மிளகாய் விதை வேளாண் அறிவியல் நிலையத்தால்  வழங்கப்பட்டது.  30 செண்ட்டிற்க்கான விதையை கடந்த காலங்களில் பயிரிடப்பட்ட ரகங்களை வாங்கிக்கொண்டு ஒவ்வொரு விவசாயியும் தனித்தனியாக 3 ரகங்களையும் ஒரு ஏக்கரில்  பயிரிடவேண்டும்.  இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பகுதிக்கு  ஏற்ற அதிக மகசூல் தரும் ரகத்தினை தாங்களே  கண்டறிந்து வரும் காலங்களில் சாகுபடி செய்ய உதவியாக இருக்கும் என முனைவர் திரு. இரா.அருண் குமார் அவர்கள் விளக்கமளித்தார்.

இதேபோல் 2 வெண்டை ரக விதைகளையும் வழங்கினார்.

துணை வேளாண்மை இயக்குனர் வருகை 
நேற்று திரு காமராஜ், துணை வேளாண்மை இயக்குனர், மத்திய திட்டம், மதுரை மற்றும் திரு மதுரை சாமி, உதவி இயக்குனர் அவர்கள்  நமது குழுவிற்கு வருகை தந்து விவசாயிகளிடையே கலந்துரையாடினார்கள்.

அப்போது குழுவின் செயல்பாடுகள், சொட்டு நீர் பாசனத்திர்கான  டீலர் ஷிப் , இடுபொருள் விற்பனை நிலையம் அமைப்பதற்க்கான விதிமுறைகள், ரோட்டாவேட்டர் மற்றும்  தென்னை மட்டை அரைக்கும் கருவி வாங்குவதற்க்காக ஆலோசனைகளை குழு உறுப்பினர்களுக்கு  வழங்கினார்கள்.

உழவர் உற்பத்தியாளர் கம்பெனி அமைப்பதற்க்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிக்கப்பட்டன




No comments:

Post a Comment