06-07-2019
இன்று மேலவளவு வீரகாளியம்மன் கோவில் திடலில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக கள்ளிக்குடி வட்டாரம் மேலாண்மை துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் கூட்டு பண்ணையம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி கூட்டம் வீரகாளி அம்மன் கோவிலில் கூட்டு பிரார்தனைக்குப் பின் கூட்டம் தொடங்கியது
பயிற்சி கூட்டம் மேலவளவு உற்பத்தியாளர் குழு செயலாளர் கே.சிரம்பரம் தலைமையிலும் பொருளாளர் ப.சௌந்தரராஜன், எஸ்.கே.ராஜசேகர், கள்ளிக்குடி வட்டார தொழிநுட்ப மேலாளர் (BTM),பா.ராஜதுரை, கோட்டம்பட்டி வட்டார தொழிநுட்ப மேலாளர் (BTM), எம்.பிரசன்னா, கள்ளிக்குடி
வட்டார உதவி தொழில் நுட்ப மேலாளர் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.
இதில் விவசாயிகளுக்கு மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழுவின் செயல்பாடுகளை பயிற்சியின் நோக்கத்தில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் கூட்டு பண்ணை திட்டம், இயற்க்கை வேளாண்மை, நீர் மேலாண்மை, உர மேலாண்மை, இயற்க்கை பூச்சி விரட்டிகள் மற்றும் விவசாயம் சார்ந்த விவாதங்கள் குழுக்களிடையே நடைபெற்றன
மேலவளவு குழுவின் இயற்க்கை விவசாயி தவச்செல்வம் விவசாயிகளுக்கு கத்தரியில் இயற்க்கை பூச்சி மேலாண்மை குறித்த அவருடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்
இயற்க்கை மேலாண்மை
கலப்பயிற்சியில் இயற்க்கை முறையில் சாகுபடி செய்த தவச்செல்வத்தின் கத்தரி தோட்டம், மணியின் வாழை தோட்டம் மற்றும் தெய்வேந்திரனின் திருந்திய நெல் சாகுபடிக்காக பாய் நாற்றங்காலை பார்வையிட்டு அது சம்பந்தமான ஆலோசனைகளில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
நீர் மேலாண்மை
வாழையில் போடப்பட்ட சொட்டு நீர் பாசனத்தை பார்வையிட்டு விவசாயிகள் அதுசம்பந்தமான ஆலோசனைகளில் ஈடுபட்டனர்
மேலும் விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை சம்பந்தமான திட்டங்களை திரு எஸ்.கே.ராஜசேகர், கள்ளிக்குடி
வட்டார தொழிநுட்ப மேலாளர் (BTM) அவர்கள் விளக்கமளித்தார்







No comments:
Post a Comment