28/6/2019 அன்று மேலவளவு வீரகாளியம்மன் கோவில் திடலில் கூட்டு பண்ணைய திட்டம், நுண்ணுயிர் உரம், நுண்ணுயிர் பாசனம் மற்றும் உழவன் செயலி குறித்த ஆலோசனை கூட்டம் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக நடைபெற்றது.
இதில்
- திருமதி விஜய லெட்சுமி, துணை வேளாண்மை இயக்குனர், மத்திய திட்டம், மதுரை
- திரு மதுரை சாமி, உதவி இயக்குனர், வேளாண்மை துறை, கோட்டம்பட்டி
- முனைவர் ரெ.உமாசங்கரேஸ்வரி, உதவி பேராசிரியர், வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மதுரை
- முனைவர் மு.ஜெயபாரதி, உதவி பேராசிரியர், வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை
- திரு பாலசுப்ரமணியன், உதவி வேளாண்மை அலுவலர் ,வேளாண்மை துறை
உள்ளிட்டோர் பங்கேற்று விவசாயிகள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கினார்
இதில் திருமதி விஜய லெட்சுமி அவர்கள் கூட்டு பண்ணைய திட்டம் குறித்த பலன்களை பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்
திரு மதுரை சாமி அவர்கள் உழவன் செயலி மற்றும் நுண்ணுயிர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
முனைவர் ரெ.உமாசங்கரேஸ்வரி தலைமையில் வேர் உட்பூசண நுண்ணுயிர் உரம் முக்கியத்துவம் மற்றும் உபயோக திறன் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார் .
முனைவர் மு.ஜெயபாரதி தலைமையில் பயிரின் வளர்ச்சிக்கு ஏற்ப திரவ நுண்ணுயிர் உரம் முக்கியத்துவம் மற்றும் உபயோக திறன் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார் .
மேலும் ரசாயன உர பயன்பட்டால் நிலத்திற்க்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் அதை சரிசெய்வதற்க்கான ஆலோசனை, வறட்சியில் பயிர் பாதுகாப்பு போன்ற விவாதங்கள் நடைபெற்றன.




No comments:
Post a Comment